CSK vs GT : என்னது சி.எஸ்.கே ரன்னரா? மைதானத்தில் ஜொலித்த மின் பலகையால் – சென்னை ரசிகர்கள் அச்சம், உண்மை என்ன

CSK vs GT
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டி மே 28ஆம் தேதிய இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கியது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன. இருப்பினும் அகமதாபாத் மைதானத்தில் 7 மணியளவில் அதிகமான மழை பெய்ததால் போட்டி குறித்த நேரத்தில் தூங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் இது ஃபைனல் என்பதால் இரவு 10:00 மணி வரை போட்டி நடத்துவதற்காக நடுவர்கள் தயாராக இருக்கின்றனர்.

ஒருவேளை இன்று முழுமையாக மழை பெய்தாலும் நாளை ரிசர்வ் நாளில் போட்டி மீண்டும் நடத்தப்பட்டு முடிவு காண்பதற்கு நடுவர்கள் முயற்சிப்பார்கள். அந்த வகையில் இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்று மகத்தான கேப்டனாக சாதனை படைத்த எம்எஸ் தோனி விரைவில் 42 வயதை தொடுவதால் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சென்னை கோப்பையை வென்று அவர் வெற்றியுடன் விடை பெறுவதை ரசிர்கள் விரும்புகின்றனர்.

- Advertisement -

ரசிகர்கள் சோகம்:
அதற்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் சுப்மன் கில், முகமது ஷமி, மோகித் சர்மா, ரசித் கான் என உச்சகட்ட பார்மில் இருக்கும் குஜராத் சவாலை கொடுத்து சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க போராட உள்ளது. அந்த நிலையில் போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் ஃபைனலுக்கு முன்பாக ஒளிபரப்பு நிர்வாகம் சார்பில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது நேராக இருக்கும் 2 பெரிய மின் திரைகளில் “ரன்னர் அப் சென்னை சூப்பர் கிங்ஸ்” என்ற புகைப்படம் ஒளிபரப்பப்பட்டது அங்கிருந்த அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

அதாவது ரன்னர் அப் என்றால் ஃபைனலில் தோற்ற அணி என்பது அர்த்தமாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏற்கனவே ஒரு தரப்பு ரசிகர்கள் ஐபிஎல் என்பதே முழுக்க முழுக்க ஃபிக்சிங் என்றும் அவை அனைத்தையும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வருமானத்தை பெருக்குவதற்காக செய்வதாகவும் சமூகவலைதளங்களில் பேசுவது வழக்கமாகும். அதன் அடிப்படையில் இந்த ஃபைனலில் இந்தியாவை தற்போது ஆட்சி செய்யும் தலைவர்களை கொண்ட குஜராத் வெற்றி பெற வேண்டும் என்று அவர் ஏற்கனவே ஃபிக்சிங் செய்ததாகவும் அதன் ஒரு பகுதிதான் ஒளிபரப்பு குழுவினரின் தவறால் தெரியாதத்தனமாக கசிந்து விட்டதாகவும் அந்த புகைப்படத்தை ஏராளமான ரசிகர்கள் பகிர்ந்தனர்.

- Advertisement -

அதை பார்த்த சென்னை ரசிகர்கள் “கோப்பையுடன் எங்கள் தல தோனி விடைபெறுவார்” என்று எதிர்பார்த்தால் இங்கு நிலைமை வேறு மாதிரி இருக்கிறதே என்று கவலையை தெரிவித்தனர். அத்துடன் அப்படியானால் ஐபிஎல் என்பது ஃபிக்சிங் என்று நிறைய பேர் சொல்வது உண்மை தானா? என்றும் நிறைய ரசிகர்களும் என்று சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆனால் உண்மை என்னவெனில் பொதுவாகவே ஃபைனல் போன்ற மிகப்பெரிய போட்டி நடைபெறும் போது போட்டி முடிந்த அடுத்த நொடியிலேயே முடிவை ரசிகர்களுக்கு தொலைக்காட்சியிலும் திரையிலும் ஒளிபரப்புவதற்காக ஒளிபரப்பு நிர்வாகம் அனைத்து வகையான முடிவுகளையும் டெம்ப்ளேட்டாக உருவாக்கி சேமித்து வைப்பது வழக்கமாகும்.

அந்த வகையில் வெற்றியாளர் குஜராத் – சென்னை, தோல்வியாளர் (ரன்னர் அப்) குஜராத் – சென்னை என 2 அணிகளுக்குமே முன்கூட்டியே புகைப்படத்தை உருவாக்கி விடும் ஒளிபரப்பு நிர்வாகம் கடைசியில் எந்த அணி வெற்றி தோல்வி பெற்றதோ அதற்கேற்ற படங்களை இறுதியாக ஒளிபரப்பும் செய்வது வழக்கமாகும். அப்படி உருவாக்கப்பட்ட அந்த போஸ்டரை போட்டிக்கு முன்பாக சோதனை செய்வதும் வழக்கமாகும்.

இதையும் படிங்க:CSK vs GT : அவரை மட்டும் தூக்கிட்டா குஜராத் அணியை ஈஸியா தூக்கிடலாம் – சி.எஸ்.கே கோச் பிளமிங் கருத்து

அந்த வகையில் அகமதாபாத் மைதானத்தில் 5 மணி அளவிலேயே அந்த சோதனை நடைபெற்ற போது தான் அங்கிருந்த ஏதோ சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது ஃபிக்ஸிங் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே சென்னை ரசிகர்கள் பயப்பட தேவையில்லை என்று ஒளிபரப்பு துறையில் வேலை செய்பவர்கள் குழப்பத்தை தீர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement