CSK vs GT : அவரை மட்டும் தூக்கிட்டா குஜராத் அணியை ஈஸியா தூக்கிடலாம் – சி.எஸ்.கே கோச் பிளமிங் கருத்து

Stephen Fleming
- Advertisement -

இந்தியாவில் நடைபெறும் வரும் நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. இந்த தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சம் தொட்டுள்ளது.

CSK vs GT

- Advertisement -

இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கு முன்னதாக சி.எஸ்.கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

இந்த இறுதிப்போட்டிக்காக நாங்கள் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகச்சிறப்பாக தயாராகியுள்ளோம். இந்த மைதானத்தில் குஜராத் அணியை எதிர்கொள்ள அனைத்து வகையிலுமே நாங்கள் தயாராக இருக்கிறோம். குஜராத் அணியின் மிகப்பெரிய பலமாக அந்த அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் திகழ்கிறார். இந்த தொடர் முழுவதுமே அவர் அற்புதமான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார்.

Gill

அவரை இந்த இறுதி போட்டியில் எவ்வளவு விரைவாக வீழ்த்த முடியுமோ அந்த அளவிற்கு விரைவாக வீழ்த்த முயற்சிப்போம். அதற்கான திட்டங்களும் எங்களிடம் உள்ளது. அவரது விக்கெட்டை துவக்கத்திலேயே வீழ்த்தி விட்டால் அந்த அணிக்கு நெருக்கடியை அளிக்க முடியும். குஜராத் அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதல்ல. இந்த போட்டி சவாலான ஒரு போட்டியாகவே இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : CSK vs GT : இன்றைய ஃபைனலுடன் ஓய்வு பெறும் நட்சத்திர சிஎஸ்கே வீரர் – அதிகாரப்பூர்வமான அறிவிப்பால் ரசிகர்கள் சோகமான பிரியா விடை

இறுதி போட்டிகளில் சி.எஸ்.கே அணியின் வெற்றி சதவீதம் 50% ஆக இருக்கிறது. நிச்சயம் இம்முறை வெற்றி பெற்று அந்த வெற்றி சதவீதை அதிகரிக்க விரும்புகிறோம். ஒரு அணி தொடர்ச்சியாக 2 முறை சாம்பியன் பட்டத்தை வெல்வது எளிதான விடயம் கிடையாது. அந்தவகையில் இந்த போட்டியில் குஜராத்தை அணியை வீழ்த்த முழுமுனைப்பை காட்டுவோம் என பிளமிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement