“மேஜர் மிஸ்ஸிங்” சென்னை அணியின் வித்தியாசமான பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள் – என்ன நடந்தது?

MSD
- Advertisement -

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் வாய்ந்த தொடராக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐந்து முறை தோனியின் தலைமையில் கோப்பை கைப்பற்றி அதிக முறை கோப்பை வென்ற அணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

சி.எஸ்.கே நிர்வாகம் வெளியிட்ட பதிவு :

கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை வென்ற பின்னர் தோனி தனது கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார். அதன்படி இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாம் இடத்தை மட்டுமே பிடித்து முன்னேறிய வேளையில் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வருகிறது.

- Advertisement -

அதே வேளையில் தோனி ரசிகர்களை மகிழ்விப்பதற்காக மேலும் ஒரு ஆண்டு நீடிக்க வேண்டும் என்று மற்ற அணியின் உரிமையாளர்களுடன் சிஎஸ்கே தீவிரமாக ஆலோசித்து வருகிறது. விதிமுறை மாற்றங்கள் குறித்த உரையாடல்களுக்கு பிறகு தோனி விளையாவாரா? மாட்டாரா? என்பது உறுதியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் சிஎஸ்கே அணி தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஒரு பதிவு தோனி மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற குழப்பத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள ஒரு பதிவில் :

- Advertisement -

நம்பர் 7 ஜெர்சியை பகிர்ந்து அருகில் மஞ்சள் விசிலையும் “மேஜர் மிஸ்ஸிங்” என்று பதிவிட்டுள்ளனர். இதன் காரணமாக தோனி ஓய்வு அறிவிக்க உள்ளாரோ என்ற பேச்சு எழுந்துள்ளது. ஒருபுறம் தோனியின் ஓய்வு பற்றி பேசி வந்தாலும் மற்றொருபுறம் மஞ்சள் நிறம், சென்னை அணியவிட்டு போகப்போகிறது வேறு ஒரு நிறம் வருவதாலே இதே போன்று பதிவிட்டு இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க : ரோஹித் தலைமையில் விளையாட வீரர்கள் அதிர்ஷ்டம் பண்ணிருக்கணும்.. காரணம் இது தான்.. ஆகாஷ் தீப் பேட்டி

ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை. இருப்பினும் ஏற்கனவே தோனி சென்னை அணியிலிருந்து விலகப்போகிறார் என்றும் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை சென்னை அணி கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement