ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 11ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் 25வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் விலகினார்.
அதன் காரணமாக 5 கோப்பைகளை வெல்வதற்கு உதவிய எம்எஸ் தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டனாக களமிறங்கினார். அந்த நிலையில் இந்தப் போட்டியில் தாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பியதாக தோனி கூறினார். அதனால் டாஸ் கிடைக்காதது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்று கூறிய அவர் பிட்ச் நேரம் செல்ல செல்ல ஸ்லோவாக மாறுவதாகவும் கூறினார்.
தோனி இஸ் பேக்:
அதில் வெற்றி பெறுவதற்கு நல்ல துவக்கத்தைப் பெறுவது அவசியம் என்று கூறிய தோனி சில போட்டிகளைத் தவிர்த்து சிஎஸ்கே மோசமாக தோற்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் இங்கிருந்து அடிப்படைகளை பின்பற்றி நன்றாக ஃபீல்டிங் செய்து டாட் பந்துகளை பேசினால் சென்னை வெற்றி பெறும் என்றும் தோனி நம்பிக்கை கூறியுள்ளார்.
மேலும் சென்னை அணியில் அன்சுல் கம்போஜ், ராகுல் திரிபாதி விளையாடுவதாக தெரிவித்த அவர் சிவம் துபே இம்பேக்ட் வீரருக்கு பதிலாக நேரடியாக அணிக்குள் சேர்த்துள்ளார். இது பற்றி தோனி பேசியது பின்வருமாறு. “நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். சில நேரங்களில் சேசிங் செய்ய முயற்சித்த போது பிட்ச் மெதுவாக மாறுகிறது என்பதை உணர்ந்தோம்”
புதிய சென்னை அணி:
“எனவே நீங்கள் அங்கே நல்ல துவக்கத்தைப் பெறாமல் போனால் அழுத்தத்திற்குள் தள்ளப்படுவீர்கள். ருதுராஜ் முழங்கையில் காயத்தை சந்தித்ததால் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். மிகவும் சிறந்த பேட்ஸ்மேனான அவர் நன்றாக டைமிங் செய்யக் கூடியவர். இப்படிப்பட்ட அவர் இல்லாதது பெரிய இழப்பு. நாங்கள் அதிக தோல்விகளை சந்தித்துள்ளதால் எங்கிருந்து ஒவ்வொரு போட்டியும் முக்கியம்”
இதையும் படிங்க: துரோகி வராரு பாருங்க இதெல்லாம் நியாயமில்ல.. ப்ராவோவை கலாய்த்த தோனி.. ஜடேஜாவுடன் நெகிழ்ச்சி சந்திப்பு
“கேட்ச்களை பிடித்து டாட் பந்துகளை வீசி அடிப்படைகளைப் பின்பற்ற வேண்டும். சில போட்டிகளில் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்றாலும் மற்ற போட்டிகளில் ஒரு ஓவர் அல்லது 20 ரன்கள் போன்ற குறைவான வித்தியாசத்தில் தோற்றோம். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் அனைத்து கண்மூடித்தனமாக பந்துகளையும் அடிக்க மாட்டார்கள். அதே சமயம் அவர்கள் தங்களது உள்ளுணர்வுகளை பின்பற்றி ஆரம்பத்திலேயே பவுண்டரிகள் அடிக்க வேண்டும். விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். ருதுராஜ், முகேஷ் சௌத்ரிக்கு பதிலாக அன்சுல் கம்போஜ், ராகுல் திரிபாதி ஆகியோர் எங்களுடைய அணிக்குள் வந்துள்ளனர்” என்று கூறினார்.



