அக்சர் படேலை தொடர்ந்து சி.எஸ்.கே அணியிலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு – என்னப்பா நடக்குது ?

Fleming
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தற்போது மிகத்தீவிரமாக வலுப்பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே மீண்டும் இந்தியா முழுவதும் அதிகரிக்கத் துவங்கியுள்ள கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகவும் அபாயமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. அதனைப் போன்றே தற்போது வெகு வேகமாக நாடு முழுவதும் பரவி வருகிறது.

ipl trophy

- Advertisement -

சாதாரண மக்கள் இன்றி பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரையும் பாதித்து வரும் கொரோனா வைரஸ் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலக சாலை பாதுகாப்பு தொடரில் விளையாடிய சச்சின், யூசப் பதான், இர்பான் பதான், பத்ரிநாத் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி விளையாடிய சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேலுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தீவிர பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் சிஎஸ்கே அணியின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உண்டாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியின் சமூக ஊடக பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவர் கடந்த சில நாட்களாக பயிற்சியாளர் மற்றும் வீரர்களுடன் நின்று பேசவில்லை என்பதை அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளதால் சிஎஸ்கே அணி வீரர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் வழக்கமான பயிற்சிகள் நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.

csk 1

இருப்பினும் வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருக்குமா என்பது குறித்து சோதனை நடைபெற உள்ளது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட அந்த சமூக ஊடக பிரிவை சேர்ந்த அந்த அதிகாரி தனிமைப்படுத்தப்பட்டு அணி நிர்வாகத்தின் மருத்துவப் பாதுகாப்பில் கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement