Qualifier 1 : இன்றைய குவாலிபையர் 1 போட்டிக்கான சி.எஸ்.கே அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

CSK
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் புள்ளி பட்டியலின் அடிப்படையில் குஜராத், சென்னை. லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த அணிகளில் கோப்பையை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பும் தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

CSK vs GT

இந்நிலையில் இந்த பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியாக இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதலாவது குவாலிபயர் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் என்பதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான சென்னை அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறித்த உத்தேச பட்டியலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

GT vs CSK MS Dhoni

அதன்படி கடந்த போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியானது வெற்றியுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளதால் அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் கிட்டத்தட்ட அதே பிளேயிங் லெவனுடன் தான் விளையாடும் என்றும் தெரிகிறது. மேலும் இம்பேக்ட் வீரராக பதிரானா விளையாடுவார் என்பது உறுதி.

- Advertisement -

அதன்படி இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன் இதோ : 1) ருதுராஜ் கெய்க்வாட், 2) டேவான் கான்வே, 3) அஜின்க்யா ரஹானே, 4) அம்பத்தி ராயுடு, 5) ஷிவம் துபே, 6) மொயின் அலி, 7) ரவீந்திர ஜடேஜா, 8) எம்.எஸ் தோனி, 9) தீபக் சாஹர், 10) துஷார் தேஷ்பாண்டே, 11) மகேஷ் தீக்ஷனா.

இதையும் படிங்க : அவர மாதிரி ஒரு தங்கமான மனுஷன வெறுக்க உங்களுக்கு மனசே வராது – நட்சத்திர இந்திய வீரரை நெகிழ்ந்து பாராட்டிய பாண்டியா

ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் மூன்று முறையும் குஜராத் அணியே சென்னை அணியை வீழ்த்தி பெற்றுள்ளது. சி.எஸ்.கே அணி இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement