- Advertisement -
ஐ.பி.எல்

CSK vs GT : இன்றைய இறுதிப்போட்டிக்கான சி.எஸ்.கே அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இன்றுடன் நிறுவைடைய உள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை வெல்ல நடப்பு சாம்பியனான குஜராத் அணி காத்திருக்கிறது. அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றிபெற்று 5 ஆவது முறையாக கோப்பையை வென்று மும்பை அணியின் சாதனையை சமன்செய்ய காத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய இறுதிப்போட்டிக்கான சி.எஸ்.கே அணியின் பிளேயிங் லெவனை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அந்த வகையில் இன்றைய இறுதிப்போட்டிக்கான சென்னை அணியில் எந்த மாற்றமும் இன்றி முதலாவது குவாலிபயர் போட்டியில் விளையாடிய அதே அணியே விளையாடும் என்று தெரிகிறது. ஏனெனில் எப்போதுமே தோனி ஒரு அணியை செட் செய்து விட்டால் பெரிய அளவில் மாற்றங்களை செய்யமாட்டார்.

எனவே நிச்சயம் இந்த இறுதிப்போட்டியில் சி.எஸ்.கே அணி வழக்கமான பிளேயிங் லெவனுடனே களமிறங்கும். அதுமட்டுமின்றி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது குவாலிபயர் போட்டியில் இதே சென்னை அணி தான் குஜராத் அணியை வீழ்த்தியிருந்தது என்பதாலும் அணியில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது.

- Advertisement -

இம்பேக்ட் ரூல்ஸ் படி மட்டும் ஒரே வீரரின் மாற்றம் இருக்கும். அந்தவகையில் எப்பொழுதுமே இம்பேக்ட் ரூல்ஸ் படி அனைத்து போட்டிகளிலும் விளையாடும் பதிரானா இந்த போட்டியிலும் இம்பேக்ட் பிளேயராக விளையாடுவார் என்பது உறுதி. அதன்படி இன்றைய இறுதி போட்டிக்கான சி.எஸ்.கே அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IPL 2023 : காதலுக்கும் சரி கேரியர் முடிஞ்சுன்னு நெனச்சப்பவும் சரி, அவர் தான் ஹெல்ப் பண்ணாரு – தீபக் சஹர் ஓப்பன்டாக்

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) டேவான் கான்வே, 3) அஜின்க்யா ரஹானே, 4) சிவம் துபே, 5) அம்பத்தி ராயுடு, 6) மொயின் அலி, 7) ரவீந்திர ஜடேஜா, 8) எம்.எஸ் தோனி, 9) தீபக் சாஹர், 10) துஷார் தேஷ்பாண்டே, 11) மகேஷ் தீக்சனா (இம்பேக்ட் வீரர் : மதீஷா பதிரானா)

- Advertisement -
Published by