சி.எஸ்.கே அணியுடன் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் 10 ஜுனியர் வீரர்கள் – விவரம் இதோ

CSKShop

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கும் இந்த தொடர் செப்டம்பர் 19-ம் தேதி துவங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. போட்டி அட்டவணை இன்னும் வெளியாகவில்லை என்றாலும் முதல் போட்டியாக சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CskvsMi

இந்நிலையில் இந்த தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகம் செல்ல தயாராகி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளனர். அதன்படி கேப்டன் தோனி, ஹர்பஜன் சிங், அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ரெய்னா என 15 வீரர்கள் இன்னும் சில தினங்களில் சென்னைக்கு வர உள்ளனர்.

மேலும் சென்னை அணி வீரர்கள் 14ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை பயிற்சியை மேற்கொள்வார்கள் என்றும் அதன்பிறகு அவர்களுக்கு 2 முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அதன்பிறகு 21 ஆம் தேதி அவர்கள் சென்னையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்வார்கள். அவர்களுடன் 10 வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்கள் செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதே போன்று அனைத்து அணி வீரர்களும் தங்களது அணிகளைச் சேர்ந்த தலைமையிடத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் தனித் தனியே செல்ல உள்ளனர்.

Dhoni-Csk

மேலும் இந்த தொடருக்காக வீரர்கள் தயாராகும் வகையில் வகையில் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் மட்டுமின்றி வலைப்பயிற்சியில் பந்து வீசுவதாக சுமார் 50 பயிற்சி பந்துவீச்சாளர்களை அனைத்து அணிகளும் சேர்ந்து அழைத்துச் செல்ல உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முதல் தரப் போட்டிகளில் அதாவது 19 வயதுக்குட்பட்ட 23 வயதுக்கு உட்பட்ட அணிகளில் விளையாடி வருபவர்கள் ஆவர்.

- Advertisement -


ஏனெனில் பவுலர்கள் எளிதாக இரண்டு மூன்று நாட்களில் பயிற்சி செய்து பாம்பிற்கு திரும்பி விடலாம். ஆனால் பேட்ஸ்மென்கள் இவ்வளவு நாட்களாக விளையாடாமல் இருப்பதால் அவர்கள் மீண்டும் பார்ம்முக்கு திரும்புவது கடினம் என்பதால் அவர்களை அனைத்து அணிகளும் வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களை செல்கின்றனர். அவர்கள் தொடர் துவங்கும் முன்வரை அணி வீரர்களுக்கு பந்து வீசி பயிற்சி அளிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.