ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 25ஆம் தேதி சேப்பாக்கத்தில் 43வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருக்கும் அவ்விரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற இங்கிருந்து அனைத்துப் போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியில் தேவாலட் ப்ரேவிஸ் சேர்க்கப்படுவதாக கேப்டன் தோனி அறிவித்தார். குறிப்பாக மிடில் ஆர்டரில் தடுமாற்றமாக விளையாடி வந்த தமிழக வீரர் விஜய் சங்கருக்கு பதில் ப்ரேவிஸ் விளையாடுவதாக தோனி கூறினார். அதே போல மற்றொரு துவக்க வீரர் ரச்சின் ரவீந்திரா தொடர்ச்சியாக அசத்துவதற்கு தடுமாறி வருகிறார்.
2 மாற்றங்கள்:
எனவே அவருக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்படுவதாக அறிவித்த தோனி சேப்பாக்கம் பிட்ச் 2010 சாம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்தது போல் தற்போது இருப்பதாக கூறினார். மற்ற படி பிட்ச் எப்படி இருக்கும் என்பது தங்களுக்கும் உறுதியாக தெரியவில்லை என்று தோனி கூறினார். அதில் பனி காரணமாக தாங்களும் முதலில் பவுலிங் செய்யவே விரும்பியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“நாங்களும் முதலில் பவுலிங் செய்வதற்கு விரும்ப பனி முக்கிய காரணம். நாங்கள் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் அசத்த வேண்டும். நீங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடாத போது மற்ற அனைத்து வீரர்கள் மீதும் அழுத்தம் உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே நாங்கள் சரியான செயல்முறைகளை பின்பற்றுவது அவசியம்”
சென்னை வெல்லுமா:
“அடுத்து வரும் போட்டிகளில் அதை செய்வதே எங்களுடைய இலக்காக இருக்கும். நாங்கள் ஒரு சமயத்தில் ஒரு போட்டியை பார்க்கிறோம். அதே சமயம் சில கலவையையும் புதிதாக உருவாக்க பார்க்கிறோம். நீங்கள் உங்களுடைய திறன் மேலே தன்னம்பிக்கை வைத்து விரும்புவதை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும். பிட்ச் பற்றி எங்களுக்கு உறுதியாக எதுவும் தெரியவில்லை. பராமரிப்பாளர்கள் முடிந்தளவுக்கு சிறந்த பிட்ச்சை கொடுப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்கள்”
இதையும் படிங்க: எங்க டீம்ல இருக்குற அந்த 4 பேட்ஸ்மேனும் ரொம்ப டேஞ்சர்.. எனக்கே அவங்கள பாத்தா பயம் – பேட் கம்மின்ஸ் கருத்து
“செம்மண்ணால் உருவாக்கப்பட்ட இந்த பிட்ச் 2010 சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு முன்பு இருந்தது போல் தற்போது இருக்கிறது என்று நான் கருதுகிறேன். எங்கள் அணியில் 2 மாற்றங்கள். ரச்சின், சங்கர் வெளியே. ப்ரேவிஸ், ஹூடா உள்ளே” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் எப்படியாவது அபாரமாக விளையாடி சென்னை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.



