- Advertisement -
ஐ.பி.எல்

230 ரன்ஸ்.. 2, 6, 6, 4, 4, 4.. ஆயுஷ் மிரட்டல்.. ரெய்னாவுக்கு பின் ப்ரேவிஸ் மாஸ் சாதனை.. குஜராத்தை அடித்த சிஎஸ்கே

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 25ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத் நகரில் 67வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் கடைசி இடத்தில் திண்டாடும் சிஎஸ்கே டாஸ் வென்று முதலில் குஜராத்துக்கு எதிராக பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத்துக்கு எதிராக ஆட்டத்தை துவங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடினார்.

அர்சத் கான் வீசிய 2வது ஓவரில் 2, 6, 6, 4, 4, 4 என 26 ரன்களை தெறிக்க விட்ட அவர் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 34 (17) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய டேவோன் கான்வே நிதானம் கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எதிர்ப்புறம் வந்த உர்வில் படேல் தம்முடைய பங்கிற்கு அடித்து நொறுக்கி 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 37 (19) ரன்களை விளாசி வேகத்தைக் கொடுத்து சென்றார்.

- Advertisement -

சென்னை அசத்தல்:

அதற்கடுத்ததாக வந்த சிவம் துபே தம்முடைய பங்கிற்கு 2 சிக்ஸரை பறக்க விட்டு 17 (8) ரன்னில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் நிதானமாக விளையாடிய கான்வே அரை சதத்தை அடித்து 52 (35) ரன்கள் எடுத்த போது ரஷித் கான் சுழலில் போல்டானார். ஆனால் இந்தப் பக்கம் களமிறங்கியிருந்த தேவால்ட் ப்ரேவிஸ் தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடினார்.

டெத் ஓவர்களில் மிகவும் அதிரடியாக விளையாடிய அவர் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வெறும் 19 பந்துகளில் அரை சதத்தை அடித்து சிஎஸ்கே 200 ரன்கள் தாண்ட உதவினார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக இரண்டாவது வேகமான அரை சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் சமன் செய்தார். இதற்கு முன் அஜிங்கிய ரஹானே (2023), மொய்ன் அலி (20220 ஆகியோரும் தலா 19 பந்துகளில் 50 ரன்கள் அடித்துள்ளார்கள்.

- Advertisement -

ப்ரேவிஸ் மாஸ் சாதனை:

2014இல் பஞ்சாப்பை அடித்து நொறுக்கிய சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் 50 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் எதிர்ப்புறம் ரவீந்திர ஜடேஜா நிதானமாக விளையாடி கை கொடுத்தார். தொடர்ந்து அசத்தலாக விளையாடிய ப்ரேவிஸ் 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 57 (23) ரன்களை விளாசி கலக்கலான ஃபினிஷிங் கொடுத்தார்.

இதையும் படிங்க: இதுதான் கடைசி ஸ்டேஜ்.. டாஸின் போதே தனது ஓய்வு குறித்த முக்கிய ஹின்ட்டை வெளிப்படுத்திய – தல தோனி

இறுதியில் ரவீந்திர ஜடேஜா 21* (18) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் சிஎஸ்கே 230-5 ரன்கள் குவித்தது. குஜராத் அணிக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதைத் தொடர்ந்து ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்புடன் சிஎஸ்கே பவுலிங் செய்து வருகிறது.

- Advertisement -