- Advertisement -
ஐ.பி.எல்

19.2 ஓவரில் 190 ரன்ஸ்.. சாம் கரண் மிரட்டியும் ஃபினிஷ் செய்யாத சிஎஸ்கே.. சஹால் வரலாற்று ஹாட்ரிக் சாதனை

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் 49வது போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரர்கள் சாய்க் ரசீத் 11, ஆயுஷ் மாத்ரே 7 ரன்களில் ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

அதனால் 22/2 என ஆரம்பத்திலேயே சென்னைக்கு ஷாம் கரண் அதிரடியாக விளையாடத் துவங்கினார். அவருடன் எதிர்புறம் அதிரடியாக விளையாட முயற்சித்த ரவீந்திர ஜடேஜா 17 (12) ரன்னில் அவுட்டானார். அடுத்ததாக வந்த தேவால்ட் ப்ரேவிஸ் நங்கூரம் கலந்த அதிரடியை காட்டி கை கொடுத்தார். அதைப் பயன்படுத்திய ஷாம் கரண் எதிர்ப்புறம் சிறப்பாக விளையாடி அரை சதத்தை அடித்தார்.

- Advertisement -

சாம் கரண் அசத்தல்:

அந்த வகையில் மூன்றாவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் பிரேவிஸ் 32 (26) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய ஷாம் கரண் சிஎஸ்கே அணிக்கு ரன் குவிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து அட்டகாசமாக விளையாடிய அவர் 9 பவுண்டரி 4 சிக்ஸருடன் 88 (47) ரன்களில் அவுட்டானார்.

இந்த வருடம் முழுவதுமே மோசமாக பேட்டிங் செய்து வந்த சிஎஸ்கே அணியில் நீண்ட நாட்கள் கழித்து சாம் கரண் அதிரடியாக விளையாடியது சென்னை ரசிகர்களை ஆறுதலும் மகிழ்ச்சியடைய வைத்தது. ஆனால் அடுத்ததாக வந்த கேப்டன் தோனி அதிரடியாக விளையாட முயற்சித்து 11 (4) ரன்னில் சஹால் சுழலில் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த தீபக் ஹூடா 2 (2), கம்போஜ் 0 ரன்களில் சஹால் சுழலில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

சஹால் ஹாட்ரிக்:

அடுத்து வந்த நூர் அகமதும் டக் அவுட்டானதால் சஹால் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதன் வாயிலாக சிஎஸ்கே அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். மேலும் ஐபிஎல் தொடரில் 2வது அதிக முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற யுவராஜ் சிங் சாதனையையும் (இருவரும் தலா 2) அவர் சமன் செய்தார்.

இதையும் படிங்க: நடப்பு 2025 ஐ.பி.எல் தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய கிளென் மேக்ஸ்வெல்.. என்ன நடந்தது? – விவரம் இதோ

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சிவம் துபேவும் 6 ரன்னில் அவுட்டானார். அதனால் 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சிஎஸ்கே 190 ரன்கள் எடுத்தது. இன்றைய போட்டியில் நன்றாக விளையாடியும் சிஎஸ்கே சிறப்பாக ஃபினிஷிங் செய்ய தவறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதனால் இந்த போட்டியிலும் சென்னை வெல்லுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -