7 ஓவரில் வெறும் 50 ரன்ஸ்.. திணறிய பேட்ஸ்மேன்கள்.. ஹைதெராபாத் வலையில் சிஎஸ்கே விழுந்தது எப்படி?

SRH vs CSK
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மார்ச் ஐந்தாம் தேதி இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் 18வது லீக் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு கடந்து போட்டியை போலவே தடுமாற்றமாக விளையாடிய ரச்சின் ரவீந்தரா 12 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அந்த நிலைமையில் வந்த ரகானே அதிரடி காட்ட முயற்சித்த காட்ட முயற்சித்த நிலையில் எதிர்புறம் நங்கூரமாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் மீண்டும் 26 (21) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். ஆனால் அப்போது வந்த சிவம் துபே தம்முடைய ஸ்டைலில் ஹைதராபாத் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தார்.

- Advertisement -

திணறிய சென்னை:
குறிப்பாக அழுத்தம் அதிகரித்த போது நடராஜன் ஓவரில் அடுத்தடுத்த சிக்ஸர்களை அடித்த அவர் ரசிகர்களை கொண்டாட வைத்தார். அதே வேகத்தில் 3வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் 2 பவுண்டரி 4 சிக்சர்களை அடித்து 45 (24) ரன்கள் அடித்து சரிவை சரி செய்து ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவரிலேயே எதிர்ப்புறம் தொடர்ந்து தடுமாற்றமாகவே விளையாடிய ரகானே 35 (30) ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை கொடுத்தார்.

ஆனால் அடுத்ததாக வந்த ரவீந்திர ஜடேஜாவும் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறினார். அதே போல எதிர்ப்புறம் வந்த டேரில் மிட்சேல் ரொம்பவே தடுமாற்றமாக விளையாடி நடராஜன் வேகத்தில் 13 (11) ரன்களில் அவுட்டானார். இறுதியில் ரவீந்திர ஜடேஜா நான்கு பவுண்டரியுடன் 31* (23) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் சென்னை 165/5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

குறிப்பாக தலா 1 விக்கெட் எடுத்த புவனேஸ்வர் குமார், நடராஜன், கேப்டன் கமின்ஸ், உனட்கட் போன்ற ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவருமே 90% மெதுவான கட்டர் பந்துகளை வீசி வலையை விரித்தனர். அதில் விழுந்த சென்னை பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முடியாமல் இன்னிங்ஸ் முழுவதும் திணறினர். அதன் காரணமாக கடைசி 7 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழந்த சென்னை வெறும் 50 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையும் படிங்க: கேப்டனா இல்லாமயே எதிரணிகளை பந்தாடி.. ரோஹித் சர்மா அந்த சாதனை படைப்பாரு.. ஸ்ரீசாந்த் அதிரடி பேட்டி

இதே மைதானத்தில் மும்பைக்கு எதிராக ஹைதராபாத் 277 ரன்கள் அடித்து சாதனை படைத்தது. அப்படிப்பட்ட மைதானத்தில் சென்னை தடுமாற்றமாக விளையாடி 170 ரன்கள் கூட அடிக்காதது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதனால் வெற்றிக்கு இந்த இலக்கு போதுமா என்பதே சென்னை ரசிகர்களின் கவலையாக இருக்கிறது. இருப்பினும் இன்றைய பிட்ச் கடினமாக இருப்பதால் ஹைதராபாத் பவுலர்கள் போலவே சென்னை பவுலர்களும் பந்து வீசி வெற்றிக்கு போராடி வருகின்றனர்.

Advertisement