புது ஜெர்சி அணிந்து மிடுக்குடன் அமர்ந்திருக்கும் தல தோனி. புது கெட்டப் வேற – சி.எஸ்.கே வெளியிட்ட புகைப்படம்

Dhoni

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான நிலையை சந்தித்தது. ஐபிஎல் வரலாற்றில் எப்பொழுதும் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது இல்லை என்ற சாதனையை கடந்த ஆண்டு தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இழந்தது. மேலும் அணியில் உள்ள பல வீரர்கள் மூத்த வீரர்கள் என்பதால் மிகப்பெரிய தடுமாற்றத்தையும் சிஎஸ்கே அணி கண்டது.

csk 1

எனவே இந்த ஆண்டு மீண்டும் பலமாக திரும்புவதற்காக சிஎஸ்கே அணி ஏற்கனவே பல இளம் வீரர்களை ஏலத்தில் எடுத்தது. அதுமட்டுமின்றி மொயின் அலி, கிருஷ்ணப்பா கவுதம் போன்ற ஆல்ரவுண்டர்களையும் அணியில் இணைத்துள்ளது. கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் ரெய்னா இன்றி தவித்தது. ஆனால் இம்முறை ரெய்னா அணியில் இணைந்துள்ளார். அதேபோன்று ஜடேஜா பிராவோ என அசத்தலான வீரர்களும் அணியில் இருக்கின்றனர்.

டாப் ஆர்டரில் கெய்க்வாட், டூபிளெஸ்ஸிஸ், ராயுடு, டோனி ஆகியோர் இருப்பதாலும் இம்முறை சிஎஸ்கே அணி பலமாக திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தோனியின் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்களே தவிர குறையவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற்றாலும் ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

csk-jersey

அவர் ஓய்வு பெற்று பல மாதங்கள் ஆனாலும் தோனி குறித்த செய்திகளோ அவர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே சற்றும் குறையவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரின்போது தோனி ஒவ்வொரு கெட்டப்பில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்த வகையில் இந்த ஆண்டு தோனி தனது புதிய கெட்டப்புடன் சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்சி அணிந்தபடி அமர்ந்திருக்கும் ஒரு புதிய புகைப்படத்தை சிஎஸ்கே அணி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

- Advertisement -

மேலும் “பாட்ஷா ஆப் சூப்பர் ஸ்மைல்ஸ்” எனவும் கேப்ஷன் கொடுத்து அந்த புகைப்படத்தை பதிவிட்டு சி.எஸ்.கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.