ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய 2026 ஐபிஎல் தொடருக்கான வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதற்கு முன்பாக 14, 2.4 கோடிகளுக்கு ரவீந்திர ஜடேஜா, ஷாம் கரன் ஆகியோரை சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் டிரேடிங் முறையில் கொடுத்தது. அதற்கு பதிலாக சஞ்சு சாம்சனை 18 கோடிக்கு டிரேடிங் முறையில் சிஎஸ்கே வாங்கியது. இதைத் தொடர்ந்து சென்னை அணி பேட்டிங் துறையில் ராகுல் திரிப்பாதி, வன்ஸ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோரை விடுவித்துள்ளது.
விடுவித்த வீரர்கள்:
விக்கெட் கீப்பிங் துறையில் டேவோன் கான்வேயை சென்னை அணி கழற்றி விட்டுள்ளது. ஆல் ரவுண்டர்கள் பிரிவில் ரச்சின் ரவீந்தரா, தீபக் ஹூடா, தமிழ்நாட்டு வீரர் விஜய் சங்கர், சாய்க் ரசீத் ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளார்கள். பந்து வீச்சுத் துறையில் கமலேஷ் நாகர்கோட்டி மற்றும் குட்டி மலிங்கா என்று வர்ணிக்கப்பட்ட மதீஸா பதிரனா ஆகியோரையும் சென்னை அணி விடுவித்துள்ளது.
இதில் பதிரனாவை விடுவித்தது பல சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது. இருப்பினும் 10 கோடி என்ற பெரிய தொகைக்கு அவரை தக்க வைப்பது சிஎஸ்கே அணிக்கு பாரமாக பார்க்கப்படுகிறது. அதனால் அவரை விடுவித்துள்ள சிஎஸ்கே மீண்டும் ஏலத்தில் வாங்கும் முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி விஜய் சங்கர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி ஆகியோர் கடந்த சீசனில் மோசமாக விளையாடி சிஎஸ்கே தோல்விக்கு காரணமாக அமைந்தனர்.
சென்னை தக்க வைத்த வீரர்கள்:
அதனால் அவர்களை கழற்றி விட்டுள்ளதற்கு சிஎஸ்கே ரசிகர்கள் வரவேற்பு தெரிவிக்கிறார்கள். அவர்களை கழற்றி விட்டுள்ளதால் சென்னை அணிக்கு 43.40 கோடி ரூபாய்கள் கையிருப்பு தொகையாக கிடைத்துள்ளது. அதை வைத்து 2026 ஐபிஎல் ஏலத்தில் 9 வீரர்களை வாங்குவதற்கான இடத்தையும் சிஎஸ்கே பெற்றுள்ளது. ஐபிஎல் 2026 ஐபிஎல் ஏலத்துக்கு முன் சிஎஸ்கே தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல்:
இதையும் படிங்க: 63 ரன்ஸ் 3 விக்கெட்ஸ்.. இதை செஞ்சாவே போதும் தெ.ஆ’வை நாளை இந்தியா வீழ்த்தும்.. அக்சர் பட்டேல் பேட்டி
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மாத்ரே, தேவால்ட் ப்ரேவிஸ்*, எம்எஸ் தோனி, சஞ்சு சாம்சன், உர்வில் பட்டேல், சிவம் துபே, ஜேமி ஓவர்டன்*, ராமகிருஷ்ணா கோஸ், நூர் அஹ்மத்*, கலீல் அஹ்மத், அன்சுல் கம்போஜ், குர்ஜப்நீத் சிங், நாதன் எலிஸ்*, ஸ்ரேயாஸ் கோபால், முகேஷ் சௌத்திரி (* குறியீடு வெளிநாட்டு வீரர்கள்)



