63 ரன்ஸ் 3 விக்கெட்ஸ்.. இதை செஞ்சாவே போதும் தெ.ஆ’வை நாளை இந்தியா வீழ்த்தும்.. அக்சர் பட்டேல் பேட்டி

Axar Patel
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த ஊரில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 159 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய இந்திய அணியும் பேட்டிங் செய்வதற்கு சவாலாக இருந்த கொல்கத்தா ஆடுகளத்தில் போராடி 189 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 39, வாஷிங்டன் சுந்தர் 29, ரவீந்திர ஜடேஜா 27, ரிஷப் பண்ட் 27 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

இந்தியா வெல்லுமா:

தென்னாபிரிக்க அணிக்கு அதிகபட்சமாக சைமன் ஹார்மர் 4, மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். அடுத்ததாக 30 ரன்கள் பின்னிலையுடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 2வது நாள் முடிவில் 93/7 ரன்களை எடுத்து தடுமாறி வருகிறது. அந்த அணிக்கு ரியன் ரிக்கல்டன் 11, ஐடன் மார்க்ரம் 4, வியான் முல்தார் 11, டீ ஜோர்ஸி 2, ஸ்டப்ஸ் 5, கெய்ல் வேர்ரின் 9, மார்கோ யான்சென் 13 ரன்களில் அவுட்டானார்கள்.

களத்தில் கேப்டன் பவுமா 29*, கோர்பின் போஸ்க் 1* ரன்களுடன் உள்ளனர். தற்சமயத்தில் 63 ரன்கள் முன்னிலை வகிக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கிறது. எனவே அந்த அணியின் முன்னிலையை 100 – 125 ரன்களுக்குள் சுருட்டும் பட்சத்தில் இந்தியா சேசிங் செய்து வெற்றி பெறுவதற்கு நல்ல வாய்ப்புள்ளதாக அக்சர் பட்டேல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அக்சர் நம்பிக்கை:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருபுறம் பார்க்கும் போது பந்து நேராக செல்வது போல் தெரிகிறது. ஆனால் மறுபுறம் பார்த்தால் அனைத்தும் நடக்கிறது. இது போன்ற பிட்ச்களில் நீங்கள் ஒரு பேட்ஸ்மேனாக அட்டாக்கிங் கிரிக்கெட்டை விளையாட வேண்டும். அடித்து விளையாடும் மனநிலையுடன் நீங்கள் சுமாரான பந்துகளை பெரிய ரன்களாக மாற்ற வேண்டும்”

இதையும் படிங்க: சுப்மன் கில்லுக்கு என்ன ஆனது? 3 பந்தோடு மைதானத்தில் இருந்து வெளியேறியது ஏன்? – பி.சி.சி.ஐ விளக்கம்

“பாதுகாப்பாக விளையாடுவோம் என்று நினைத்தால் உங்களால் எப்போதும் போட்டிக்குள் இருக்க முடியாது. பிட்ச்சில் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு ஏதேனும் உதவி கிடைக்கிறது என்று தெரிந்த பின்பும் ஸ்பின்னராக நீங்கள் மேஜிக் பந்துகளை வீசலாம் என்ற நிலையை தொடர முடியாது. இது போன்ற சூழ்நிலைகளில் பொறுமையே வெற்றிக்கான சாவியாகும். ஒருவேளை அவர்களை நாங்கள் 125 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தால் அது எட்டக்கூடிய இலக்காக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement