சுப்மன் கில்லுக்கு என்ன ஆனது? 3 பந்தோடு மைதானத்தில் இருந்து வெளியேறியது ஏன்? – பி.சி.சி.ஐ விளக்கம்

Shubman Gill
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தங்களது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் செய்ய வந்து வெறும் 3 பந்துகளை மட்டும் சந்தித்து 4 ரன்கள் எடுத்து மைதானத்திலிருந்து ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறியது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது.

சுப்மன் கில்லின் காயம் குறித்து விளக்கம் கொடுத்த பி.சி.சி.ஐ :

அந்த வகையில் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது நேற்றைய ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்திருந்த வேளையில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கியது.

- Advertisement -

அதன்படி இன்று போட்டி ஆரம்பித்ததும் அணியின் எண்ணிக்கை 75 ரன்களாக இருந்தபோது வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது பேட்டிங் செய்ய களத்திற்கு வந்த சுப்மன் கில் வெறும் 3 பந்துகளை மட்டுமே சந்தித்து ஒரு பவுண்டரி அடித்தபோது அவர் கழுத்து பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் அவர் மீண்டும் பேட்டிங் செய்ய களத்திற்கு திரும்பவில்லை.

அதனால் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 189 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் 30 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை துவங்கிய தென்னாப்பிரிக்க அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை குவித்து தடுமாறி வருகிறது. இதன் காரணமாக 63 ரன்கள் முன்னிலையில் நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் கேப்டன் கில் 3 பந்துகளை மட்டுமே சந்தித்து வெளியேறிய பின்னர் களத்திற்கு திரும்பாததற்கு என்ன காரணம்? என்பது குறித்து பிசிசிஐ தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்துள்ளது. அந்த வகையில் வெளியான அறிக்கையில் : சுப்மன் கில் பேட்டிங் செய்யும்போது கழுத்து பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் மீண்டும் களத்திற்கு திரும்ப முடியாமல் ஓய்வறையில் இருந்தார்.

இதையும் படிங்க : எனக்கு ராஜஸ்தான் அணி டீம் மட்டுமல்ல.. என்னோட வீடும் அதுதான் – ரவீந்திர ஜடேஜா நெகிழ்ச்சி

அவரது காயத்தை மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது. இன்றைய இரண்டாம் நாள் போட்டியில் மீண்டும் களத்திற்கு வராத அவர் நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் வருவாரா? மாட்டாரா? என்பது அவரது காயத்தின் தன்மையை பொருத்தும், அவரது தனிப்பட்ட முடிவை பொருத்துமே அமையும் என பிசிசிஐ விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement