எனக்கு ராஜஸ்தான் அணி டீம் மட்டுமல்ல.. என்னோட வீடும் அதுதான் – ரவீந்திர ஜடேஜா நெகிழ்ச்சி

Jadeja RR
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் 15-ம் தேதியான இன்று அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும், தக்க வைக்கும் விரும்பும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்தது.

ராஜஸ்தான் அணிக்கு செல்வதில் மகிழ்ச்சி : ரவீந்திர ஜடேஜா

அதற்குள்ளதாக பத்து அணிகளுக்கும் இடையேயான டிரேடிங் முறை நடைமுறையில் இருப்பதால் டிரேடிங் வாயிலாகவும் சில வீரர்கள் அணிமாற்றம் செய்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு பெரியளவில் பேசப்பட்டுள்ள டிரேடிங்கான சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது பரிமாற்றம் இன்று அதிகாரபூர்வமாக நடைபெற்ற முடிந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளார். அதே வேளையில் ஜடேஜாவிற்கு மாற்றாக சஞ்சு சம்சானை சி.எஸ்.கே அணி வர்த்தகம் செய்து தங்களது அணிக்கு கொண்டு வந்துள்ளது.

கடந்து 2012-ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக விளையாடி வந்த ஜடேஜாவை விடுவித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சிஎஸ்கே அணிக்காக 2018, 2021, 2023 ஆகிய மூன்று ஐ.பி.எல் கோப்பையை வென்ற அணிகளில் அவர் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனக்கு வெறும் டீம் மட்டும் அல்ல வீடு என்றும் ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : நானும் கிளம்புறேன்.. விஸ்வாசமான சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி.. அந்த 3 வருடத்தை மறக்கல.. கான்வே உருக்கம்

ஐபிஎல் போட்டிகளில் எனக்கு முதல் தளத்தை அமைத்துக் கொடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான். எனவே இங்கு திரும்பி வருவது சிறப்பு வாய்ந்தது. எனக்கு இது வெறும் அணி மட்டுமல்ல என்னுடைய வீடும் இதுதான். என்னுடைய முதல் ஐபிஎல் கோப்பையை நான் இங்கு தான் வென்றேன். இனி இந்த அணிக்காக மேலும் கோப்பையை வெல்ல விரும்புகிறேன் என ஜடேஜா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement