அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணியால் தக்கவைக்கப்படும் 4 வீரர்கள் இவர்கள் தானாம் – சின்ன தலைக்கே ஆப்பாம்

csk-1

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 13 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள 14 வது சீசன் வருகிற செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 8 அணிக்காக விளையாடி வரும் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு 14வது சீசனில் 10 அணிகளாக பங்கேற்று நடத்தப்படும் என்று பிசிசிஐ சார்பில் தகவல்கள் வெளியாகியது.

IPL

மேலும் புதிய 2 அணிகளுக்கான ஏலத்தொகை மற்றும் இதர விவரங்கள் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் அணிகளுக்கான மெகா ஏலம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை தக்க வைக்கலாம்.

- Advertisement -

அதன்படி 2 இந்திய வீரர்கள், இரண்டு வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரர் என எந்த வகையிலும் வீரர்களை தக்க வைக்க அணி நிர்வாகத்திற்கு உரிமை உண்டு. அந்த வகையில் தற்போது அடுத்த ஆண்டு ஏலத்தில் சிஎஸ்கே அணி எந்த 4 வீரர்களை தக்க வைக்கப் போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Jadeja

அதன்படி முதல் வீரராக தோனியை தாண்டி ஜடேஜாவை தக்கவைக்க சிஎஸ்கே நிர்வாகம் நினைக்கிறது. ஏனெனில் சிஎஸ்கே அணியின் மிக முக்கிய வீரராக இருக்கும் ஜடேஜா வருங்காலத்திலும் சிஎஸ்கே அணிக்கு விளையாட வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் தக்க வைக்கப்படுகிறார். அவரை தொடர்ந்து கேப்டன் தோனி தக்க வைக்கப்படுகிறார் மேலும் வெளிநாட்டு வீரர் சாம் கரன் மற்றும் துவக்க வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் ஆகியோர் தக்க வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

Raina

இதன் காரணமாக அணியில் உள்ள மூத்த வீரர்கள் டூப்லெஸ்ஸிஸ், பிராவோ ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சின்னத் தல ரெய்னாவும் இந்த தக்கவைக்கும் பட்டியலில் இல்லாததால் அவரும் மீண்டும் ஏலத்திற்கு சென்றே சிஎஸ்கே அணிக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement