அடுத்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன் சி.எஸ்.கே அணி தக்கவைக்கும் 3 வீரர்கள் இவர்கள்தான் – லிஸ்ட் இதோ

CSK-2

2020-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரானது சென்னை அணிக்கு மிக மோசமான தொடராக அமைந்தது. ஏனெனில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் லீக் சுற்று போட்டிகளோடு முதல் அணியாக தோனி தலைமையிலான சென்னை அணி வெளியேறியது. அதன் பின்னர் ஏகப்பட்ட விமர்சனங்கள் சென்னை அணியின் மீது இருந்தாலும் தற்போது 2021 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மட்டுமின்றி சென்னை அணியானது இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

Dhoni-3

இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வர அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வீரர்கள் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடத்தப்பட இருக்கிறது. ஏனெனில் அடுத்த ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் புதிதாக இணைய இருப்பதால் இந்த ஏலம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அடுத்த பல ஆண்டுகளுக்கான சென்னை அணியை பலமாக அமைக்க வேண்டும் என்பதற்காக முக்கிய மூன்று வீரர்களை சென்னை அணி ரீடெயின் செய்ய உள்ளது.

- Advertisement -

அந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர் 1) தோனி : சென்னை அணியின் கேப்டனாக துவக்க காலத்திலிருந்தே இருந்து வரும் தோனி ஒவ்வொரு முறையும் சென்னை அணியை தனது அபாரமான கேப்டன்சி மூலம் பிளே ஆப் சுற்று அழைத்து செல்கிறார். அந்த வகையில் ஏற்கனவே நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய தோனி அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை உருவாக்கவேண்டும் என்கிற காரணத்தினால் நிச்சயம் சென்னை அணியால் தக்க வைக்கப்படுவார்.

deepak 1

2) ஜடேஜா : முன்னணி ஆல் ரவுண்டர் ஜடேஜா பல ஆண்டுகளாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடைபெற்று முடிந்த இந்த ஐபிஎல் தொடரிலும் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா நிச்சயம் சிஎஸ்கே அணியின் எதிர்கால வீரராக பார்க்கப்படுவதால் அவரும் ரீடெயின் செய்யப்படுவார்.

- Advertisement -

Gaikwad 3

3) ருதுராஜ் கெய்க்வாட் : சென்னை அணியின் இளம் வீரரான இவர் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் 16 போட்டிகளில் விளையாட 635 ரன்களை விளாசியுள்ளார். அதில் ஒரு அட்டகாசமான சதத்தையும் அடித்துள்ளளார். எனவே நிச்சயம் சென்னை அணியின் தொடக்க வீரராக இவரே அணியில் நீடிப்பார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement