பேரு மட்டும் தான் சி.எஸ்.கே, ஆனா நம்ம பசங்க யாரும் டீம்ல இல்ல – ரசிகர்கள் ஆதங்கம்

Jagadeesan
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக 2023-ஆம் ஆண்டிற்கான 16-ஆவது ஐபிஎல் தொடருக்கான வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்த சீசனுக்கு முன்னர் இந்த தொடரில் பங்கேற்க உள்ள பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்களின் பட்டியலை இன்றுடன் அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

- Advertisement -

அதன்படி நவம்பர் 15-ஆம் தேதியான இன்று அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து நீக்கிய வீரர்களை பட்டியலிட்டு வெளியிட்டு விட்டது. இப்படி வெளியேறிய வீரர்கள் அனைவரும் வரும் டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி நடைபெற இருக்கும் மினி ஏலத்தில் கலந்து கொண்டு அதில் மற்ற அணிகளுக்காக தேர்வு செய்யப்பட காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த தொடரில் இருந்து பிராவோ, கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே, பகத் வர்மா, கே.எம் ஆசிப் ஆகியோரை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி கூடுதலாக தமிழகத்தைச் சேர்ந்த ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் ஆகியோரையும் விடுவித்துள்ளது.

Natarajan Washingtan Sundar Hari Nishanth

இப்படி தமிழக வீரர்களான நாராயணன் ஜெகதீசன் மற்றும் ஹரி நிஷாந்த் ஆகிய வீரர்களை சென்னை அணி வெளியேற்றியது தற்போது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்ற அணிகளில் இடம் பெற்று விளையாடி வரும் வேளையில் சென்னை அணியில் இடம் பெற்றும் தமிழக வீரர்களை அவர்கள் தக்க வைக்காமல் வெளியேற்றியுள்ளது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

பெயர் மட்டும்தான் சிஎஸ்கே ஆனால் நம் மாநில தமிழக வீரர்களுக்கு சிஎஸ்கே எப்பொழுதுமே முன்னுரிமை தருவதில்லை என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். ரசிகர்கள் கூறி வருவது போலவே அஸ்வின், முரளி விஜய், பாலாஜி போன்ற நட்சத்திர வீரர்கள் மட்டுமே சிஎஸ்கே அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 ஏலம் : மும்பை தக்க வைத்த – வெளியேற்றிய 13 வீரர்கள், கையிருப்பு தொகை எவ்வளவு – அதிகாரபூர்வ பட்டியல் இதோ

அவர்களை தவிர்த்து தமிழகத்தில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு இதுவரை பெரிய அளவில் சிஎஸ்கே அணி பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மைதான்.

Advertisement