ஆர்.சி.பி அணியின் கேப்டனாக மாறிய டூபிளெஸ்ஸிஸ்க்கு வாழ்த்து சொல்லிய சி.எஸ்.கே – என்ன சொல்லியிருக்காங்க

Faf
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்க உள்ளது. ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வரும் மார்ச் 26 முதல் மே 22 வரை நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.

தயாராகும் பெங்களூரு:
இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. குறிப்பாக நடப்புச் சாம்பியனாக எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இதர நாடுகளை காட்டிலும் கோப்பையை தக்க வைப்பதற்காக முன்கூட்டியே குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடந்த ஒரு வாரமாக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

அதேபோல் இந்த தொடரில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி கோப்பையை வெல்வதற்கு ஒரு சில அணிகள் தங்கள் அணி வீரர்கள் அணிந்து விளையாடும் புதிய ஜெர்ஸியை வெளியிட்டு வருகின்றன. மேலும் பஞ்சாப், கொல்கத்தா போன்ற கேப்டன் இல்லாத அணிகள் தங்களின் புதிய கேப்டனை அறிவித்து வருகின்றன.

புதிய கேப்டன் பப் டு பிளேஸிஸ்:
அந்த வரிசையில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தங்களின் புதிய கேப்டன் மற்றும் ஜெர்சியை சில தினங்களுக்கு முன் அறிவித்துள்ளது. இதற்காக பெங்களூருவில் உள்ள ம்யூஸியம் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்தியேக நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான பெங்களூரு ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் ஐபிஎல் 2022 தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வழிநடத்தும் புதிய கேப்டனாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர் “பப் டு பிளேஸிஸ்” அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த அவர் அந்த அணியின் முதுகெலும்பு வீரராகக் கருதப்பட்டார். குறிப்பாக கடந்த வருடம் கூட 633 ரன்கள் விளாசிய அவர் அந்த அணி 4-வது முறையாக கோப்பையை வெல்வதற்கு துருப்புச் சீட்டாக செயல்பட்டார். அப்படிப்பட்ட அவரை அந்த அணி வாங்காத நிலையில் 7 கோடி கொடுத்து வாங்கிய பெங்களூரு அணி நிர்வாகம் தற்போது தங்கள் அணிக்கு புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவின் தேசிய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் நிறைந்த இவரை கேப்டனாக நியமித்துள்ளதால் பெங்களூரு அணி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

இந்நிலையில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட டூபிளெஸ்ஸிஸ்க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் தற்போது நீண்ட ஆண்டுகள் அவர் பயணித்த சிஎஸ்கே அணியும் தங்களது பங்கிற்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : “Stay Fafulous forever.! Sending all the #Yellove என்று தங்களது வாழ்த்தினை வழங்கியுள்ளது. சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்ட இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement