சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இன்று விளையாடும் சி.எஸ்.கே அணியின் – பிளேயிங் லெவன் இதோ

CSKvsSRH
- Advertisement -

கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் லீக் சுற்றோடு வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இம்முறை அனைவரையும் அசர வைக்கும் விதமாக அற்புதமாக விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்த 14-வது நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மட்டுமின்றி பிளே ஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

csk vs srh

- Advertisement -

இந்நிலையில் அடுத்து லீக் சுற்றில் எஞ்சியுள்ள 4 போட்டிகளிலும் சென்னை அணி விளையாட இருக்கிறது. அதன்படி இன்று சிஎஸ்கே அணி 11வது போட்டியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக ஷார்ஜா மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. ஏற்கனவே புள்ளி பட்டியலில் கடைசி இடம் பெற்று பிளேஆப் வாய்ப்பை தவறவிட்ட சன்ரைசர்ஸ் அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும் அதேவேளையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிஎஸ்கே அணியும் இன்று வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தும்.

ஏற்கனவே சிஎஸ்கே அணியில் இருக்கும் பலத்தைப் பார்த்தால் நிச்சயம் சிஎஸ்கே தான் இந்த போட்டியிலும் வெற்றி பெறும் என்று நம் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது.

csk

ஏனெனில் தற்போதுள்ள அணி நல்லா நன்றாக செட்டில் ஆகி விளையாடி வருவதால் இதை பிரிக்காமல் அப்படியே கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இன்றைய போட்டிக்கான சி.எஸ்.கே அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : ஓப்பனர்கள் அதிரடியாக விளையாடியும் நாங்க தோக்க இதுவே காரணம் – வருத்தத்துடன் பேசிய சஞ்சு சாம்சன்

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) டூபிளெஸ்ஸிஸ், 3) மொயின் அலி, 4) சுரேஷ் ரெய்னா, 5) அம்பதி ராயுடு, 6) தோனி, 7) ஜடேஜா, 8) சாம் கரன், 9) தீபக் சாகர், 10) ஷர்துல் தாகூர், 11) ஹேசில்வுட்

Advertisement