ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20ஆம் தேதி மும்பையில் 38வது போட்டி நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு துவங்கி அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் எதிராக முதலில் பௌலிங் செய்வதாக அறிவித்தது. மறுபுறம் தாங்களும் அதையே செய்ய விரும்பியதாக சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்தார்.
ஏனெனில் மும்பையில் இரவு நேரத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரண்டாவதாக பௌலிங் செய்வது கடினம் என்று தோனி கூறினார். மேலும் சென்னை அணியில் ராகுல் திரிபாதிக்கு பதிலாக இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே களமிறக்கப்படுவதாக தோனி அறிவித்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் ராகுல் திரிபாதி இதுவரை நடைபெற்ற எந்த போட்டிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
திரிபாதிக்கு டாட்டா:
அத்துடன் 5 தொடர்ச்சியான தோல்விகளால் புள்ளி பட்டியலில் சிஎஸ்கே கடைசி இடத்தில் தவிப்பதாகவும் தோனி கவலை தெரிவித்தார். எனவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் இங்கிருந்து தைரியமான கிரிக்கெட்டை விளையாடினால் மட்டுமே கம்பேக் கொடுக்க முடியும் என்றும் அவர் கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“நாங்களும் முதலில் பவுலிங் செய்யவே பார்த்தோம். அதற்கான முதன்மை காரணம் என்னவெனில் இப்போதே பனி ஆரம்பம் ஆகிவிட்டது. அது போட்டி முழுவதும் இப்படியே இருக்குமா அல்லது இன்னும் மோசமாக மாறுமா என்பதைப் பார்க்க வேண்டும். நாங்கள் இந்த வருடம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறோம். எனவே எதைப் பற்றியும் அதிகமாக பார்க்காமல் ஒரு நேரத்தில் ஒரு போட்டியை மட்டும் எடுத்து எங்களை வெற்றியை நோக்கி தள்ளப் பார்ப்போம்”
கம்பேக் வழி:
“அதற்கு நாங்கள் தைரியமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும். அதே சமயம் எங்களுடைய பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் தங்களுடைய பலம் என்ன என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும். ஃபீல்டிங் துறையில் நாங்கள் கேட்சுகளை நன்றாக பிடிக்கவில்லை. அது நாங்கள் அதிகம் முன்னேற வேண்டிய துறையாகும்”
இதையும் படிங்க: என்னைவிட ஆட்டநாயகன் விருதினை அவருக்கு குடுக்குறது தான் சரியா இருக்கும் – பெருந்தன்மையாக பேசிய விராட் கோலி
“பேட்டிங் அல்லது பவுலிங் செய்யும் போதும் நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடுவது முக்கியம். எங்களுடைய அணியில் ஒரு மாற்றம். திரிபாதிக்கு பதிலாக ஆயுஸ் எங்கள் அணிக்குள் வந்துள்ளார்” என்று கூறினார். அந்த வகையில் சிஎஸ்கே அணி இங்கிருந்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமெனில் இன்னும் 6 – 7 வெற்றிகள் அவசியமாவது குறிப்பிடத்தக்கது.



