இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் போட்டியானது இன்று சண்டிகர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் முதலில் தங்களது அணி பந்துவீசம் என்று அறிவித்தார்.
என்னைவிட ஆட்டநாயகன் விருதுக்கு அவர்தான் தகுதியானவர் : விராட் கோலி
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 33 ரன்களையும், ஷஷாங்க் சிங் 31 ரன்களையும் குவித்தனர். பெங்களூரு அணி சார்பாக க்ருனால் பாண்டியா மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக விராட் கோலி 73 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 61 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 54 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 73 ரன்களை குவித்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து பேட்டியளித்த விராட் கோலி கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த வெற்றியின் மூலம் கிடைத்துள்ள இரண்டு புள்ளிகள் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை தவிர்த்து வெளியில் நாங்கள் விளையாடி வரும் விதம் மிகச் சிறப்பாக இருக்கிறது. தற்போது நாங்கள் 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இருப்பதால் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளதாக நினைக்கிறேன். இந்த போட்டியில் தேவ்தத் படிக்கல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். எனவே என்னை பொறுத்தவரை இந்த ஆட்டநாயகன் விருது அவருக்கு தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதையும் படிங்க : தோனி இன்னும் விளையாட சிஎஸ்கே கொடுத்து வெச்சிருக்கனும்.. நீங்களே அதை பாத்துருப்பிங்க.. ஹசி பாராட்டு
அதை ஏன் என்னிடம் கொடுத்தார்கள்? என்று தெரியவில்லை. நான் இந்த போட்டியில் கடைசி வரை ஒருபுறம் நின்று விளையாட நினைத்தேன். அதற்கு ஏற்றாற்போன்று எதிர்புறம் இருக்கும் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடினர். அதனால் நான் ஒருபுறம் நிலையாக நின்று போட்டியை முடிக்க முடிந்தது என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.



