மைதானம் வந்தடைந்த வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் – சிறப்பான வரவேற்பு

CSKShop

இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் போட்டித்தொடர் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்கான இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானம் வந்தடைந்தனர். இவர்களுக்கு அணி நிர்வாகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை அணி வீரர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினருக்கும் முதல் போட்டியை காண அணி நிர்வாகம் அழைப்பு விடுத்ததால் அவர்களும் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்துள்ளனர்.

இதனை சென்னை அணி நிர்வாகம் இதனை தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த முதல் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற தீவிரம் காட்டும் என்பதால் போட்டி சுவாரசியமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

கடந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி இந்தாண்டும் கோப்பையை தக்கவைத்துக்கொள்ள களமிறங்குகிறது. அதேபோன்று ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது.