” நான் உங்கள் வீட்டு பிள்ளை ” மீண்டும் தமிழில் அசத்திய ஹர்பஜன் சிங் ! தமிழன்டா

Harbhajan-singh
- Advertisement -

இந்த ஐபிஎல் சீசனின் மூலமாக சென்னை அணிக்கு வந்துள்ள வீரர்கள் அனைவரும் தமிழ் கற்றுக்கொள்வார்கள் போல.தமிழக மக்களின் மொழிப்பற்றை அறிந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் தற்போது சமூகவலைத்தளங்களில் தமிழில் டிவீட் செய்து சென்னை அணியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

harbhajan

- Advertisement -

சென்னை அணியில் இணைந்த நாள்முதல் தமிழில் டிவீட் செய்து தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவருகின்றார்.ஏற்கனவே பல தமிழ் டிவீட்களை பதிவிட்டுள்ள ஹர்பஜன்சிங் சமீபத்தில் உணர்ச்சிப்பூர்வமாக தமிழில் மற்றொரு டிவீட் செய்து சென்னை அணி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

சமீபத்திய டிவீட்டில் ஹர்பஜன்சிங் “தமிழ்நாட்டுக்கு வருகை தந்த நாளில் இருந்து தமிழ்மக்கள் என்மேல் காட்டும் அளவுகடந்த பாசமும், நேசமும் என்னை வியக்க வைக்கிறது. உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே.

இந்த பந்தம் தொட்டு தொடரும் ஒரு பட்டு பாரம்பரியமாக தொடரட்டும்” என்று எழுதியுள்ளார்.இந்த டிவீட்தான் தற்போது தமிழக ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.இதற்கு முன்னதாக ஹர்பஜன்சிங்கை போலவே பிராவோ,சுரேஷ்ரெய்னா போன்றோரும் தமிழில் டிவீட் செய்துள்ளனர்.

Advertisement