காயமடைந்த மொயின் அலிக்கு பதிலாக அடுத்த போட்டியில் விளையாடப்போவது இவர்தான் – சி.எஸ்.கே நிர்வாகம் முடிவு

moeen-ali-1

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் புதன்கிழமை அன்று விளையாடின. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி வெற்றி பெற்றது ஒரு பக்கம் சந்தோஷம் கழித்து வந்தாலும் மறுபக்கம் ஒரு சோகமான செய்தி சென்னை ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது சென்னை அணிக்காக மிக சிறப்பாக விளையாடி வரும் ஆல்ரவுண்டர் வீரர் மொயின் அலி அந்த போட்டியில் காயமடைந்துள்ளார். பீல்டிங் செய்து கொண்டிருந்த மொயின் அலி ஒரு சமயத்தில் பந்தை தடுக்க போய் தனது காலை காயப்படுத்தியுள்ளார்.

moeen ali 2

அதன் பிறகு அவரால் பீல்டிங் செய்ய முடியவில்லை உடனடியாக மருத்துவ குழு அவரை டிரெஸ்சிங் ரூமிற்கு அழைத்துச் சென்றது. அவரைப் பற்றிய செய்திகள் தற்போது வரை சென்னை அணி நிர்வாகம் கூறாத நிலையில் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. எனவே அவருக்கு பதிலாக வேறு எந்த வீரரை களம் இறங்குவது என்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அவருக்கு பதிலாக விளையாடக்கூடிய இரண்டு திறமை வாய்ந்த வீரர்கள் யார் என்றால் அது நிச்சயம் சான்ட்னர் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் மட்டுமே. குறிப்பாக கவுதம் 2018 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் பதினோரு விக்கெட்டுகளையும் கைப்பற்றிய 126 ரன்கள் குவித்தார். ஆனால் அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் அவர் சிறப்பாக பங்களிக்கவில்லை. அதன் காரணமாக ராஜஸ்தான் அணி அவரை கைவிட சென்னை அணி இந்த ஆண்டு அவரை வாங்கியுள்ளது.

நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளில் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. நிச்சயமாக அவரை அடுத்த போட்டியில் காணலாம் என்று ரசிகர்கள் மட்டுமன்றி கிரிக்கெட் வல்லுனர்களும் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால் மொயீன் அலிக்கு பதிலாக கௌதம் களமிறங்கினால் வேறு ஒரு வெளிநாட்டு வீரர்கள் சென்னை அணி விளையாட வைக்க முடியும்.

- Advertisement -

அப்படி கௌதம் விளையாடினால் நிச்சயமாக பிராவோவை விளையாட வைக்கலாம், இது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். எனவே அடுத்த போட்டியில் கிருஷ்ணப்பா கௌதம் விளையாடவே அதிக வாய்ப்புள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.