சி.எஸ்.கே அணியில் இருந்து கழட்டிவிடப்பட இருக்கும் 3 முக்கிய வீரர்கள் – லிஸ்ட் இதோ

CSK-1
- Advertisement -

இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் வரலாற்றில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமின்றி பல நட்சத்திர வீரர்களை தங்கள் வசம் வைத்து ரசிகர்களின் மத்தியிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தது.

- Advertisement -

இதனையடுத்து சிஎஸ்கே அணியின் மீது அதிகப்படியான விமர்சனங்களும், ரசிகர்கள் சற்று மன வருத்தத்தையும் தெரிவித்திருந்தனர். இருந்தாலும் சி.எஸ்.கே அணிக்கான ஆதரவு இன்றுவரை சற்றும் குறையவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 11ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்கும் 8 அணிகளின் வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டு மீண்டும் மற்ற அணிகளால் வாங்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஒவ்வொரு அணியிலும் சில வீரர்களை தக்க வைப்பதற்கு உரிமை உள்ளது. இதன் காரணமாக இம்முறை அனைத்து அணிகளிலும் பல மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

Vijay

கடந்த ஐபிஎல் தொடரின்போது சிஎஸ்கே அணிக்காக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய், பியூஷ் சாவ்லா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோரை சிஎஸ்கே நிர்வாகம் வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. இதில் முரளி விஜய் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் கடந்த ஆண்டு சில போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாட தவறினர். அதேபோன்று ஹர்பஜன் துபாய் செல்லும் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருந்தாலும் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக அவர் விலகியதால் இந்த ஆண்டு அணியிலிருந்து கழட்டி விடப்பட இருக்கிறார்.

மேலும் சில வீரர்கள் சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு வீரர்கள் வெளியேறி அதற்கு உண்டான தொகை இருக்கும் பட்சத்தில் புது வீரர்களை எடுக்க சிஎஸ்கே அணி பலமான ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement