அடுத்த போட்டியில் சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேற்றப்பட உள்ள முன்னணி வீரர் – அதிரடி முடிவு

CSK-1
- Advertisement -

நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பாக இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பௌலிங் அற்புதமாக இருந்தது. முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் தொடர்ச்சியான விக்கெட்டுகளை இழந்தனர்.

chahar 1

- Advertisement -

இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தத் தொடரில் சென்னை அணியின் பேட்டிங் வரிசை மிகப் பலமாக இருக்கிறது.

அதே சமயம் சென்னை அணி ஒவ்வொரு போட்டியிலும் மூன்று ஆல்ரவுண்டர்களை பயன்படுத்தி வருகிறது. நேற்றையப் போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது ஆனால் ஒவ்வொரு போட்டிக்கும் பந்து வீச்சு என்பது மிக முக்கியமான ஒன்று என்பதால் சென்னை அணி ஒரு ஆல்ரவுண்டரை எடுத்துவிட்டு ஒரு முழு நேர பந்து வீச்சாளரை உள்ளே கொண்டுவரும் திட்டத்தை வைத்திருக்கிறது.

bravo

அதன்படி சென்னை அணியின் வெளிநாட்டு ஆல்ரவுண்டரான ப்ராவோவை பெஞ்சில் உட்கார வைத்து விட்டு, அவருக்கு பதிலாக இம்ரான் தாஹிர் அல்லது லுங்கி இங்கிடி இருவரில் யாரேனும் ஒருவரை ப்ளேயிங் லெவன்ஸில் கொண்டுவர இருக்கிறது. டூபிளெஸ்ஸிஸ் ஓப்பனிங் ஆடுவதாலும் சாம் கரன் மற்றும் மொயின் அலி இருவரும் தவிர்க்கமுடியாத ஆல்ரவுண்டர்கள் என்பதால் இவர்கள் 3 பேரும் விளையாடுவார்கள்.

bravo

அதே சமயம் பின்வரிசையில் விளையாடும் பிராவோவுக்கு பதிலாக முழுநேர வேகப்பந்து வீச்சாளரை சி.எஸ்.கே அணி விளையாட வைக்க திட்டமிட்டுள்ளது. இதன்காரணமாக பிராவோவை பெஞ்சில் உட்கார வைக்க முடிவெடுத்துள்ளது சென்னை அணி.

Advertisement