போன வருஷம் 15 கோடிக்கு விலைபோன வீரரை இம்முறை வெறும் 1 கோடிக்கு தட்டிதூக்கிய சி.எஸ்.கே – நல்ல ஐடியா

MS-Dhoni-and-Auction
- Advertisement -

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலமானது கேரள மாநிலம் கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் எதிர்வரும் 2023-ஆம் ஆண்டிற்கான 16வது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்த மினி ஏலம் நடைபெற்று வருகிறது. உலகெங்கிலும் இருந்தும் 800-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவுசெய்த வேளையில் 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் மட்டுமே இறுதி செய்யப்பட்டனர்.

அந்த வகையில் இன்று துவங்கிய இந்த ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது. எந்தெந்த வீரர்கள், எந்தெந்த அணிக்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ள இவ்வேளையில் சென்னை அணி வாங்கும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்காக ரூபாய் 15 கோடிக்கு வாங்கப்பட்ட நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கையில் ஜேமிசனை யாரும் ஏலத்தில் எடுக்க பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால் அவரை அடிப்படை விலையான ஒரு கோடிக்கு சென்னை அணி மினி ஏலத்தில் எடுத்துள்ளது. வேகப்பந்து வீச்சாளரான கையில் ஜேமிசன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமான பார்மை வைத்துள்ளதால் நிச்சயம் இவரை தோனி அழகாக பயன்படுத்தி சிறந்த வீரராக மெருகேற்றுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது.

அந்த வகையில் தான் இவரை ஏலத்தில் சிஎஸ்கே அணி எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக அறிமுகமான அவர் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரிலும் கடந்த ஆண்டு 9 போட்டிகளில் விளையாடிய அவர் 9 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டார்.

- Advertisement -

மேலும் பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதனாலும், சுமாரான பவுலிங்கினாலும் அவர் பெங்களூர் அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட வேளையில் வெறும் ஒரு கோடிக்கு அவரை சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது நல்ல ஒரு முடிவு என்று கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் சென்னை அணியின் இந்த முடிவை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க : கேப்டன் அவர் தான் ஆனா என்ன செய்றார்னு அவருக்கே தெரியாது – கேஎல் ராகுலை கலாய்க்கும் ரசிகர்களின் ரியாக்சன்கள் இதோ

இருப்பினும் இவரால் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது தெரியவில்லை. இப்படி ஒரு வீரர் ஒரு ஆண்டு 15 கோடிக்கு விலைக்கு போன பின்னர் அடுத்த ஆண்டே இவ்வளவு பெரிய மோசமான சரிவினை சந்தித்தது அனேகமாக இவராகவே இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement