ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் எம்எஸ் தோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணிக்காக 5 கோப்பைகளை வென்ற தோனி வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் 42 வயதை தொட்டுவிட்டதால் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு கடந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பதவியில் இருந்து விலகிய அவர் சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார்.
மறுபுறம் ருதுராஜ் தலைமையில் கொஞ்சம் தடுமாற்றமாகவே விளையாடிய சென்னை கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்று சென்னையில் நடைபெற்ற ஃபைனலில் கோப்பை வென்று தோனியை வெற்றியுடன் வழியனுப்பும் வாய்ப்பை சிஎஸ்கே நழுவ விட்டது. ஏனெனில் தம்முடைய கேரியரின் கடைசிப் போட்டி சென்னையில் தான் நடைபெறும் என்று தோனி அறிவித்திருந்தார்.
ஸ்க்ரீனை உடைத்த தோனி:
முன்னதாக 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை தோற்கடித்த ஆர்சிபி அணியினர் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றதை கோப்பையை வென்றதற்கு நிகராக கொண்டாடினர். குறிப்பாக சிஎஸ்கே அணியினர் கை கொடுக்க வருவதை கவனிக்க முடியாத அளவுக்கு ஆர்சிபி அணியினர் வெறித்தனமாக கொண்டாடினர். அதனால் வெறுப்பான தோனி கை கொடுக்காமல் பெவிலியனுக்கு திருப்பினார்.
அங்கே சென்ற தோனி ஆர்சிபி அணியிடம் சந்தித்த தோல்வியால் தமது ஐபிஎல் கேரியர் முடிந்து விட்டதாக நினைத்து கோபத்தில் உடைமாற்றும் அறையில் இருந்த தொலைக்காட்சியை உடைத்ததாக ஹர்பஜன் சிங் நேற்று கூறியிருந்தார். அதைத் தாம் நேரில் பார்த்ததாகவும் ஹர்பஜன் சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தி இருந்தார். அந்த வகையில் கூலான கேப்டன் என்று அறியப்படும் தோனி தொலைக்காட்சியை உடைத்தார் என்ற செய்தி வைரலானது.
போலியான செய்தி:
இந்நிலையில் அதைப் பார்த்த சிஎஸ்கே அணியின் உடற்பயிற்சியாளர் டாமி சிம்செக் இது குப்பையான போலியான செய்தி என்று தெரிவித்துள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “இது முற்றிலும் குப்பையானது. எம்.எஸ். தோனி எதையும் உடைக்கவில்லை. போட்டி முடிந்த பின் அவர் கோபமாக இருந்ததை நான் எப்போதும் பார்த்ததில்லை. போலியான செய்தி” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாண்டியா அவ்வளவு ஒர்த் இல்ல.. மறுபடியும் தப்பு செய்யாம மும்பை ரோஹித்தை விட்டு பிடிக்கலாம்.. டாம் மூடி
அந்த வகையில் ஹர்பஜன் சிங் சொன்னது போலியான செய்தி என்று அவர் உண்மையை உடைத்து பதிலடி கொடுத்துள்ளார். இந்த நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் அன்கேப்ட் பிளேயர் விதிமுறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி தோனி சென்னை அணிக்காக மீண்டும் விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.



