ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான ஏல விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன் படி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைக்க முடியும் அல்லது ஏலத்தில் ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்க முடியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை கழற்றி விடுமா? ஹர்திக் பாண்டியாவை தக்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஏனெனில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய மும்பை ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது. அவருடைய தலைமையில் மோசமாக விளையாடிய மும்பை கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது. இந்நிலையில் 18 கோடிக்கு முதல் வீரராக மும்பை தக்க வைக்கும் அளவுக்கு ஹர்திக் பாண்டியா தகுதியாக இல்லை என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
14 கோடிகள் போதும்:
அத்துடன் ரோஹித் சர்மாவை ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இஷான் கிசான் போன்றவர்களை 14 கோடிக்கு மீண்டும் வாங்கி மும்பை தவறு செய்யக்கூடாது என்று விமர்சித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “மும்பை அணியில் நானாக இருந்தால் பும்ரா மற்றும் சூரியகுமாரை 18 கோடிகளுக்கு தக்க வைப்பேன். ஹர்திக் பாண்டியா 14 கோடிகளுக்கு இருக்கலாம். மும்பையிலிருந்து வெளியேறுவது அவருடைய விருப்பம்”
“சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் அவருடைய பார்ம் மற்றும் ஃபிட்னஸ் ஆகியவை குறைந்துள்ளன. எனவே அவர் 18 கோடிக்கு தக்க வைக்க தகுதியானவரா? 18 கோடிக்கு தக்க வைக்க நீங்கள் மேட்ச் வின்னராக இருப்பதுடன் அதைத் தொடர்ந்து செய்து காட்ட வேண்டும். ஆனால் பாண்டியா கடந்த சில ஐபிஎல் தொடர்களில் செயல்பாடுகள் மற்றும் ஃபிட்னஸ் ஆகிய இரண்டிலும் தடுமாறி வருகிறார். திலக் வர்மா நல்ல வீரர்”
மும்பையின் தவறு:
எனவே பும்ரா, சூரியகுமார், பாண்டியா, திலக் வர்மா ஆகியோர் மும்பை தக்க வைக்கப்பட வேண்டிய 4 வீரர்கள். ரோஹித் சர்மா என்ன விரும்புகிறார் என்பதைப் பொறுத்து அவரை நீங்கள் ஏலத்தில் ஆர்டிஎம் பயன்படுத்தி மீண்டும் வாங்கலாம். மும்பை அணிக்குள் என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது என்பது நமக்கு தெரியாது. கடந்த சில வருடங்களாக அவர்கள் ஏலத்தில் கொஞ்சம் பிரச்சனைகள் சந்தித்தனர்”
இதையும் படிங்க: இந்திய அணியின் கஜினி யார்.. ரோஹித் சர்மாவை நேருக்கு நேராக கலாய்த்த சூரியகுமார், துபே
“குறிப்பாக இசான் கிசான், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரை மும்பை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியது. ஆனால் அதற்கு பதிலாக அவர்களுக்கு என்ன கிடைத்தது? இஷான் கிசான் நல்ல வீரர் தான். ஆனால் 14 கோடிகளை கொடுத்த அவரிடமிருந்து உங்களுக்கு என்ன செயல்பாடு கிடைத்தது? எனவே இது போன்றவற்றை சோதித்து நீங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.



