சி.எஸ்.கே அணியில் இணைந்த முதல்நாள் தோனியிடம் ஒரு பைக் கொடுத்தேன். என்ன செய்தார் தெரியுமா? – சி.எஸ்.கே ஓனர் பேட்டி

Srinivasan
Advertisement

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்றளவும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். உலகெங்கிலும் பல கோடி ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் தோனி 40 வயதை கடந்தும் சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட ரசிகர்கள் அவர் மீது வைத்துள்ள அபரிவிதமான அன்பே காரணம். அதன் காரணமாகவே சென்னை மைதானத்தில் நடக்கும் போட்டியில் தான் தான் ஓய்வு பெறுவேன் என்று கூறி சென்னை மீதும் தமிழகத்தின் மீதுமான தனது அன்பை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

MS Dhoni vs MI

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி துவங்கப்பட்ட போது கேப்டனாக பொறுப்பேற்ற அவர் இன்றளவும் சென்னை அணியின் கேப்டனாக திகழ்ந்து வருகிறார். இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பைகளை வென்ற அணிகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் டோனி தலைமையிலான சென்னை அணி நான்கு முறை கோப்பையை வென்றது மட்டுமின்றி ஐந்து முறை இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

- Advertisement -

இப்படி சென்னை அணிக்காக மட்டுமின்றி உலக அளவில் தலைசிறந்த கேப்டனாக விளங்கும் டோனி எவ்வளவு பெரிய பைக் பிரியர் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் சென்னை அணியின் உரிமையாளரான சீனிவாசன் தோனிக்கும், பைக் மீது உள்ள பிரியத்திற்கும் இடையேயான ஒரு சுவாரசியமான சம்பவத்தை தற்போது பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் :

Dhoni Bike

சென்னை அணி துவங்கப்பட்ட போது முதல் நபராக தோனியை ஒரு கேப்டனாக நியமிக்கவே நாங்கள் அணியில் தேர்வு செய்தோம். அதன்படி அவர் எங்கள் அணிக்கு விளையாட ஒப்பந்தமானதும் முதல் நாள் அன்று அவருக்கு ஒரு பைக்கை பரிசாக வழங்கினோம். அந்த பைக்கை பரிசாகப் பெற்றுக் கொண்ட தோனி அங்கிருந்து மாயமாகிவிட்டார். அன்றைய நாள் முழுவதும் சென்னை முழுக்க அவர் பைக்கில் பயணம் செய்தார்.

- Advertisement -

தோனிக்கு சென்னையில் பைக் ஓட்டுவது என்றால் அலாதி பிரியம். ஒருவேளை நீங்கள் சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறும் போது அருகில் ஒரு பைக் உங்களை கடந்து சென்றால் அது தோனியாக கூட இருக்கலாம். ஏனென்றால் அவருக்கு அந்த அளவுக்கு பைக்கில் சென்னையில் பயணிக்க மிகவும் பிடிக்கும் என்று தோனியின் பைக் மீதான பிரியம் குறித்து அவர் பேசியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs ENG : அந்த 2 தரமானவர்கள் மோதுவதை பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கும், மிஸ் பண்ணாம பாருங்க – ஜாஹீர் கான் கருத்து

இந்திய அணியை தாண்டி மஞ்சள் நிற ஜெர்சியில் தோனி இன்று வரை விளையாடி வருவதை பார்க்க ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் தோனியின் மீது அலாதி பிரியம் உடைய தமிழக மற்றும் தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் அவரை தல என்று அன்புடன் அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement