IND vs ENG : அந்த 2 தரமானவர்கள் மோதுவதை பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கும், மிஸ் பண்ணாம பாருங்க – ஜாஹீர் கான் கருத்து

Zaheer
Advertisement

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா களமிறங்கும் 5-வது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ஆம் தேதியன்று மதியம் 3.30 மணிக்கு பர்மிங்காம் நகரில் துவங்குகிறது. கடந்த வருடம் துவங்கிய இந்த தொடரின் முதல் 4 போட்டிகளில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்துக்கு எதிராக அற்புதமாக விளையாடிய விராட் கோலி தலைமையிலான இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்ற போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி தற்போது நடைபெற உள்ளது. எனவே வெற்றியாளரை நிர்ணயிக்கும் இந்த முக்கியமான போட்டியில் வென்று 15 வருடங்களுக்கு பின் கோப்பையை வெல்ல இந்தியாவும் தொடரை சமன் செய்வதற்கு இங்கிலாந்தும் போராட உள்ளன.

ind vs eng

இதில் கடந்த முறை ஜோ ரூட் தலைமையில் திண்டாடிய இங்கிலாந்து இம்முறை புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையில் வலுவான அணியாக மாறியுள்ளதால் இப்போட்டியில் வென்று 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய அந்த அணி தயாராகியுள்ளது. மறுபுறம் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா முதல் முறையாக இப்போட்டியின் வாயிலாக வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை வழி நடத்த காத்திருந்த நிலையில் கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த முக்கிய போட்டியில் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

விராட் – ஆண்டர்சன்:
இந்தியா – இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டிகள் என்றாலே அதில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் விராட் கோலியும் தரத்திலும் தரமான பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சனும் நேருக்கு நேர் மோதிக்கொள்வதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். ஏனென்றால் ஜாம்பவான் சச்சினையே அதிகமுறை அவுட் செய்த பவுலர் என்ற மகத்தான பெருமைக்குச் சொந்தக்காரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது அற்புதமான ஸ்விங் வேகப்பந்துகளால் 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விராட் கோலியை பெரிய ரன்களை ரன்களை எடுக்க விடாமல் மொத்தமாக சாய்த்தார். சொல்லப்போனால் தனது கேரியரில் அந்த வருடம் தான் விராட் கோலி மிகப்பெரிய சரிவை சந்தித்து திண்டாடியதாக அவரே கூறியுள்ளார்.

Anderson-3

இருப்பினும் 2016 சுற்றுப்பயணத்தில் ஒருசில முறை அவுட்டானாலும் ஆண்டர்சனை அற்புதமான எதிர்கொண்டு ரன்களை குவித்த விராட் கோலி 2018 சுற்றுப்பயணத்தில் ஒருமுறைகூட அவுட்டாகாமல் அபாரமாக பேட்டிங் செய்து இங்கிலாந்து கால சூழ்நிலையில் ஆண்டர்சனுக்கு எதிராக தம்மால் ரன்களை குவிக்க முடியும் என்று விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தன்னை உலகத்தரம் வாய்ந்த வீரராக நிரூபித்தார். அதன்பின் 2021இல் நடந்த 4 போட்டிகளில் மீண்டும் ஆண்டர்சனுக்கு எதிராக ஒருசில முறை தடுமாறி அவுட்டானாலும் கணிசமான ரன்களையும் விராட் கோலி எடுத்திருந்தார்.

- Advertisement -

கடைசி முறையாக:
மொத்தமாக இதுநாள்வரை ஆண்டர்சனுக்கு எதிராக 681 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 292 ரன்கள் 42.4 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார். அதேபோல் ஆண்டர்சன் 7 முறை அவரை அவுட் செய்துள்ளார். இம்முறை 40 வயதைக் கடந்தாலும் பழைய சரக்கை போல முன்பை விட இருமடங்கு வீரியமாக பந்துவீசி 650க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து உலக சாதனை படைத்து வரும் ஜேம்ஸ் ஆண்டர்சனை 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தவித்து வரும் விராட் கோலி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பார்த்து அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

anderson 1

இந்நிலையில் 40 வயதை கடந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் இனிமேல் ஓய்வு பெற்று விடுவார் என்பதால் அடுத்த முறை இந்தியாவும் இங்கிலாந்தும் மோதும் போது இந்த இருவரும் நேருக்கு நேர் மோதுவதை பார்க்க முடியாது என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் ஜாஹீர் கான் இந்த உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் மோதுவது இதுவே கடைசியாக இருக்கும் என்று கணித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இவர்களது போட்டியை எவ்வளவு பார்க்கிறீர்களோ அந்த அளவுக்கு விரும்ப முடியும். ஆனால் இந்த போட்டியை பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். ஏனெனில் சமீப காலங்களில் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாத ஆண்டர்சன் ஓய்வை நெருங்கியதாக நினைக்கிறேன்”

- Advertisement -

“மேலும் அடுத்த இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இன்னும் நிறைய இடைவெளி உள்ளது. எனவே இவர்களிடையே தற்போதைய போட்டி மிகுந்த சுவாரசியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த தொடரில் ஆண்டர்சன் பந்தை அற்புதமாக ஸ்விங் செய்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருந்தார். எனவே இம்முறையும் விராட் கோலிக்கு இப்போட்டி நல்ல சவாலாக அமையப் போகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க : ஒன்னு அந்த ஈகோவ விடுங்க இல்ல இதை செய்யுங்க – தடுமாறும் விராட் கோலிக்கு மிஸ்பா உல் ஹக் அறிவுரை

அத்துடன் ஒருசில மாதங்கள் ஓய்வு எடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு பலரும் விராட் கோலிக்கு ஆலோசனை வழங்கியதைப் பற்றி பேசிய ஜாஹிர் கிரிக்கெட்டில் அப்படி எந்த ஒரு பார்முலாவும் கிடையாது என்று பதிலளித்தார். அப்படி ஒரு பிரேக் தேவைப்பட்டால் அதை விராட் கோலி தன்னிச்சையாக முடிவெடுத்து எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர யாரும் பரிந்துரைக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்.

Advertisement