- Advertisement -
ஐ.பி.எல்

5க்கு 5.. நாக் அவுட் செய்த பஞ்சாப்.. சிஎஸ்கே 2008 – 2024 ஐபிஎல் வரலாறு காணாத 3 மோசமான சாதனை தோல்வி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி சேப்பாக்கத்தில் 49வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை இந்த வருடம் முதல் முறையாக அதிரடியாக விளையாட முயற்சித்த போதிலும் 19.2 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக ஷாம் கரண் அபாரமாக விளையாடி 88, தேவால்ட் பிரேவிஸ் 32 ரன்கள் எடுத்தார்கள். பஞ்சாப் அணிக்கு சஹால் ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அடுத்ததாக விளையாடிய பஞ்சாப் அணிக்கு பிரியான்ஸ் ஆர்யா 23 (15) ரன்னில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் அதிரடியாக விளையாடிய ப்ரப்சிம்ரன் சிங்குடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார்.

- Advertisement -

பஞ்சாப் வெற்றி:

2வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் பிரப்சிம்ரன் அரை சதத்தை அடித்து 54 (36) ரன்களில் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த நேகல் வதேரா 5, சசாங் சிங் சரவெடியாக 23 (12) ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். மறுபுறம் தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஸ்ரேயாஸ் அரை சதத்தை அடித்து 72 (41) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து விக்கெட்டை இழந்தார்.

அதை வீணடிக்காமல் இறுதியில் ஜோஸ் இங்லீஷ் 6*, மார்க்கோ யான்சன் 4* ரன்கள் எடுத்த உதவியுடன் 19.4 ஓவரில் 194/6 ரன்களை எடுத்த பஞ்சாப் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையும் சேர்த்து 10 போட்டிகளில் 6வது வெற்றியை பெற்ற அந்த அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது. அத்துடன் சிஎஸ்கே அணியை இந்த தொடரில் இருந்து பஞ்சாப் நாக் அவுட் செய்தது.

- Advertisement -

நாக் அவுட்டான சிஎஸ்கே:

ஏனெனில் 10 போட்டிகளில் வெறும் 2 வெற்றி 8 படுதோல்விகளை சந்தித்த சென்னை அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் 2020, 2022, 2024க்குப்பின் 4வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் சென்னை தோல்வியை சந்தித்துள்ளது. சொல்லப்போனால் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக அடுத்தடுத்த தொடர்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி சிஎஸ்கே மோசமான சாதனைப் படைத்துள்ளது.

இதையும் படிங்க: 19.2 ஓவரில் 190 ரன்ஸ்.. சாம் கரண் மிரட்டியும் ஃபினிஷ் செய்யாத சிஎஸ்கே.. சஹால் வரலாற்று ஹாட்ரிக் சாதனை

அத்துடன் இந்த வருடம் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய 5 போட்டிகளிலும் சென்னை தோற்றுள்ளது. இதன் வாயிலாக சேப்பாக்கம் மைதானத்தில் வரலாற்றில் முதல் முறையாக சிஎஸ்கே 5 தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்துள்ளது. இது போக ஒரு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் அதிக தோல்விகளையும் பதிவு செய்து சென்னை வரலாறு காணாத மோசமான சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. 5* (2025)
2. 4 (2008)
3. 4 (2012)

- Advertisement -