சி.எஸ்.கே அணி கழட்டிவிட்ட 6 வீரர்கள் இவர்கள் தான். டாட்டா காட்டிய சி.எஸ்.கே – அதிகாரபூர்வ அறிவிப்பு

CSK
- Advertisement -

இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் வரலாற்றில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமின்றி பல நட்சத்திர வீரர்களை தங்கள் வசம் வைத்து ரசிகர்களின் மத்தியிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தது.

- Advertisement -

இதனையடுத்து சிஎஸ்கே அணியின் மீது அதிகப்படியான விமர்சனங்களும், ரசிகர்கள் சற்று மன வருத்தத்தையும் தெரிவித்திருந்தனர். இருந்தாலும் சி.எஸ்.கே அணிக்கான ஆதரவு இன்றுவரை சற்றும் குறையவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 11ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்கும் 8 அணிகளின் வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டு மீண்டும் மற்ற அணிகளால் வாங்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஒவ்வொரு அணியிலும் சில வீரர்களை தக்க வைப்பதற்கு உரிமை உள்ளது. இதன் காரணமாக இம்முறை அனைத்து அணிகளிலும் பல மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

Harbhajan

இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணி இந்த ஏலத்திற்கு முன்னர் கழற்றி விட இருக்கும் ஆறு வீரர்களை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி சிஎஸ்கே அணியில் இருந்து கழற்றி விடப்பட இருக்கும் வீரர்கள் 1) வாட்சன் 2) ஹர்பஜன் சிங் 3) கேதார் ஜாதவ் 4) முரளிவிஜய் பியூஷ் சாவ்லா மற்றும் மோனு சிங் ஆகிய 6 பேரை சிஎஸ்கே அதிகாரபூர்வமாக வெளியேற்றி பதிவினை வெளியிட்டு உள்ளது.

இதில் வாட்சன் அனைத்து வகைகளிலும் ஓய்வு பெற்று விட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளார். கேதார் ஜாதவ் மோசமான ஆட்டம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். தமிழக வீரரான முரளி விஜய்யும் இந்த பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement