சி.எஸ்.கே டீம் இவரை மட்டும் இப்போ ஏலத்துல வாங்கிட்டா யாராலும் தோக்கடிக்க முடியாது – அந்த வீரர் யார் தெரியுமா ?

CSK-1
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிஎஸ்கே அணியிடம் இருந்து சற்று மோசமான ஆட்டமே வெளிப்பட்டு வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா ? என்ற சந்தேக நிலையிலேயே உள்ளது. ஏனெனில் இனிவரும் போட்டிகளில் நிச்சயம் சிஎஸ்கே அணி நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கிறது.

- Advertisement -

மேலும் சிஎஸ்கே அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் வயதான வீரர்கள் என்பதால் அவர்களின் ரன்னிங் பெரிய பிரச்சினைக்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில் இந்த வருடம் சிஎஸ்கே அணியில் எப்போதும் இல்லாத வகையில் ஓபனிங் மிகவும் பொறுமையாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வழக்கமாக சிஎஸ்கே அணியில் அதிரடி துவக்க வீரர்கள் இருந்ததால் அவர்கள் சிறப்பான துவக்கத்தை கொடுக்கும் பட்சத்தில் சி.எஸ்.கே அணி எளிதாக வெற்றிகளை தொடர்ந்து குவித்து வந்தது. ஆனால் தற்போது மூன்றாம் இடத்தில் விளையாடி பழக்கப்பட்ட டூபிளெஸ்ஸிஸ் துவக்க வீரராக வாட்சனுடன் விளையாடி வருவதால் சென்னை அணி அதிரடியாக ஆட முடியாமல் பலவீன மடைந்து காணப்படுகிறது.

watson

இந்நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் மிட் சீசன் டிரான்ஸ்பர் எனப்படும் விதி முறையின் மூலமாக தொடரின் பாதியில் வீரர்களை மாற்றிக்கொள்ளும் முறை இருக்கின்றது. இதன் மூலமாக மும்பை அணியில் உள்ள தொடக்க வீரரான கிறிஸ் லின்னை சிஎஸ்கே அணி தொடக்க வீரராக தேர்ந்தெடுக்கலாம் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். ஏனெனில் இதுவரை மும்பை அணிக்காக இதுவரை விளையாடவில்லை.

- Advertisement -

அதனால் அவரை ஏலத்தில் எடுத்து வாட்சனுடன் ஓபன் செய்ய வைத்தால் டூபிளெஸ்ஸிஸ், ராயுடு, ஜடேஜா, தோனி என மிடில் ஆர்டர் பலப்படும் என்பதால் அவரை ட்ரான்ஸபர் முறையில் சிஎஸ்கே அணி வாங்கலாம். அப்படி வாங்கும் பட்சத்தில் சிஎஸ்கே அணியை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

chris

ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த அதிரடி வீரரான கிறிஸ் லின் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சுனில் நரேனுடன் இணைந்து அதிரடி துவக்கத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சமீபத்தில் நடைபெற்ற கரீபியன் லீக் தொடரிலும் இவர் தனது அதிரடி வெளிப்படுத்தியதால் நிச்சயம் இவரது வருகை சிஎஸ்கே அணிக்கு மிகப் பெரிய பலத்தை அளிக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement