ரெய்னாவின் அருமை இப்போ தெரியுமே! வெற்றியை கோட்டைவிட்ட சென்னையை விளாசும் முன்னாள் வீரர் – எதற்கு தெரியுமா?

Raina
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை மண்ணை செய்த பஞ்சாப் வெறும் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 187/4 ரன்கள் விளாசியது. அந்த அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் மயங்க் அகர்வால் 18 (21) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் மற்றும் பனுக்கா ராஜபக்சா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து சென்னை பவுலர்களை சரமாரியாக அடித்து ரன்களைச் சேர்த்தனர்.

2-வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 42 (32) ரன்கள் எடுத்து ராஜபக்சா அவுட்டாக அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் தன் பங்கிற்கு அதிரடியாக 19 (7) ரன்கள் எடுத்தார். இருப்பினும் கடைசி வரை அவுட்டாகாமல் சென்னைக்கு மிகப் பெரிய தொல்லை கொடுத்த ஷிகர் தவான் அதிரடியாக 9 பவுண்டரி 2 சிக்சருடன் 88* (59) ரன்கள் குவித்தார். சென்னை சார்பில் அதிகபட்சமாக டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

சென்னை போராடி தோல்வி:
அதை தொடர்ந்து 188 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு ராபின் உத்தப்பா 1 (7), மிட்சேல் சட்னர் 9 (15) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான நிலையில் ஷிவம் துபேவும் 8 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 40/3 என ஆரம்பத்திலேயே அந்த அணி திணறியது. அப்போது களமிறங்கி அம்பத்தி ராயுடு மற்றொரு தொடக்க வீரர் ருத்ராஜ் உடன் இணைந்து சென்னையை மீட்டெடுக்கும் முயற்சியில் போராடினார். 2-வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் சென்னை பெரிதும் நம்பியிருந்த ருதுராஜ் 30 (27) ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினார்.

அதன்பின் அதிரடி காட்டிய அம்பத்தி ராயுடு வெறும் 39 பந்துகளில் 7 பவுண்டரி 6 சிக்சர்கள் உட்பட 78 ரன்களை விளாசி சென்னையின் வெற்றிக்கு தனி ஒருவனாக போராடிய நிலையில் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அவருக்கு கை கொடுக்க வேண்டிய கேப்டன் ஜடேஜா 21* (16) ரன்கள் மட்டுமே எடுக்க தோனியும் 12 (8) ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் 176/6 ரன்களை மட்டுமே எடுத்து சென்னை போராடி தோற்றது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ரபாடா மற்றும் ரிஷி தவான் ஆகியோர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

வெளியேறும் சென்னை:
இந்த வெற்றியால் பங்கேற்ற 8 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் புள்ளி பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. அதேசமயம் பங்கேற்ற 8 போட்டிகளில் 6-வது தோல்வியை பதிவு செய்த சென்னை 9-வது இடத்தில் தத்தளிப்பதால் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு மங்கிப் போயுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் சென்னை தோல்விக்கு சுமாரான பேட்டிங் மற்றும் சுமாரான பௌலிங் ஒரு காரணமாக இருந்தது.

ஆனாலும் முக்கிய நேரத்தில் அந்த அணி தவறவிட்ட ஒரு சில கேட்ச்கள் தான் தோல்விக்கு முதல் படியாக அமைந்தது. ஏனெனில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 40/1 என்ற நிலைமையில் இருந்த போது பஞ்சாப் வீரர் ராஜபக்சா கொடுத்த கேட்சை ருதுராஜ் கைக்வாட் கோட்டை விட்ட நிலையில் மீண்டும் அடுத்த சில ஓவர்களில் அவர் கொடுத்த மற்றொரு கேட்ச்சை மற்றொரு வீரர் மிட்செல் சான்ட்னர் கோட்டை விட்டார். இந்த 2 கேட்ச்களையும் கொடுத்த போது வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ராஜபக்சா அதன்பின் 42 (32) ரன்களை அடித்தார். இந்த இடத்தில் 38 ரன்களை எக்ஸ்ட்ராவாக வாரி வழங்கிய சென்னை இறுதியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.

- Advertisement -

ரெய்னாவின் அருமை:
இந்த போட்டி மட்டுமல்லாது கடந்த சில போட்டிகளாகவே இது போன்ற முக்கிய கேட்ச்களை சென்னை அணி கோட்டை விட்டதே அடுத்தடுத்த தோல்விகளுக்கு மிக முக்கிய காரணமாக இருந்து வருகிறது. மொத்தத்தில் நேற்றைய போட்டியில் கேட்ச்சால் வெற்றியை சென்னை கோட்டை விட்டது அம்பலமான நிலையில் இப்போதாவது சுரேஷ் ரெய்னாவின் அருமை புரிகிறதா என்று முன்னாள் இந்திய வீரர் அமித் மிஸ்ரா சென்னையை விளாசியுள்ளார்.

2008 முதல் கடந்த வருடம் வரை தனது அபார திறமையால் பல சரித்திர வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றி சின்ன தல என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவரை சென்னை அணி நிர்வாகம் வலுக்கட்டாயமாக கழற்றி விட்டது. மேலும் அவர் எந்த அளவுக்கு ஒரு சிறப்பான பீல்டர் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. மின்னல் வேகமாக பந்தை எறிந்து ரன்அவுட் செய்வது, அழகாக கேட்ச் பிடிப்பது போன்ற திறமைகளை பெற்ற அவர் தற்போது சென்னை அணியில் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு என அமித் மிஸ்ரா தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சென்னையை பந்தாடிய கப்பார் தவான் ! முறுக்கிய மீசையுடன் படைத்த முத்தான 3 சாதனைகள் இதோ

அவர் கூறுவது போல உலகின் மிகச் சிறந்த ஒரு பீல்டராக கருதப்படும் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த வீரராக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement