தொடர் தோல்வியின் எதிரொலி : ஜடேஜாவிற்கு ஆப்பு வைக்கவுள்ள சி.எஸ்.கே நிர்வாகம் – என்ன தெரியுமா?

Jadeja
- Advertisement -

நடப்பு சாம்பியனான சிஎஸ்கே கடந்த ஆண்டு தங்களது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் பலம் வாய்ந்த அணியாக ஐபிஎல் தொடரில் தங்களது முத்திரையைப் பதித்து இருந்தது. அதனை தொடர்ந்து இந்தியாவில் துவங்கி நடைபெற்று வரும் 15-வது சீசனிலும் சிஎஸ்கே அணி தங்களது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

CSK-1

- Advertisement -

அதனைத் தொடர்ந்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே அணி எவ்வாறு செயல்படப்போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஐபிஎல் வரலாற்றில் மோசமான சரிவை சி.எஸ்.கே அணி சந்தித்துள்ளது என்று கூறலாம்.

ஏனெனில் முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 131 ரன்களை மட்டுமே குவித்து எளிதாக தோற்ற சென்னை அணி அதனைத்தொடர்ந்து லக்னோ அணிக்கு எதிராக 210 ரன்கள் அடித்தும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை சந்தித்தது. இப்படி அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணி 3-வது லீக் போட்டியில் நிச்சயம் தோல்வியில் இருந்து மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

CSK vs PBKS

ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இப்படி சிஎஸ்கே ஒரு தொடரில் முதல் மூன்று போட்டிகளை இதுவரை தோற்றதே கிடையாது. இதன் காரணமாக தற்போது ஜடேஜாவின் கேப்டன் பதவி மீது மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் கடந்த ஆண்டு வரை சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என 3 துறைகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா இம்முறை கேப்டன் பதவியை ஏற்றுள்ளதால் அந்த அழுத்தம் காரணமாகவே சோபிக்க தவறிவிட்டார் என்ற கருத்துக்களும் அதிக அளவில் இருந்து வருகின்றன.

CSKvsPBKS

இதன் காரணமாக ஜடேஜா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள். ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒருமுறை கேப்டனை நியமித்தால் எளிதில் மாற்றக் கூடியவர்கள் அல்ல. இருப்பினும் சிஎஸ்கே அணி இந்த லீக் தொடரின் ஆரம்பத்திலேயே நிறைய தோல்விகளை சந்திக்கும் பட்சத்தில் நிச்சயம் மொயின் அலி அல்லது பிராவோ ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்யவும் அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சொந்த வீடு கூட இல்ல, ஐபிஎல் சம்பளம் வந்தபின் தாய் தந்தைக்கு புதிய வீடு வாங்கணும் – இளம்வீரர் நெகிழ்ச்சி

நிர்வாகம் உடனடியாக இந்த முடிவை எடுக்காது என்றாலும் அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜடேஜா தற்போது இக்கட்டான சூழலில் சிக்கி இருக்கிறார். சென்னை அணி அடுத்ததாக ஏப்ரல் 9-ஆம் தேதி நான்காவது லீக் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement