தோனி விருப்பம் தான் எல்லாம். நாங்க அவரை விட்டுக்கொடுக்க மாட்டோம் – சி.எஸ்.கே நிர்வாகம் அறிவிப்பு

Dhoni

மகேந்திர சிங் தோனி கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு எளிமையாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தார். இதற்காக ரசிகர்கள் தற்போது வரை சமூகவலைதளத்தில் அவருக்கு பிரியாவிடை கொடுத்து வருகிறார்கள். என்னதான் இருந்தாலும் இப்படி இப்படி ஒரு ஜாம்பவான் கிரிக்கெட் வீரருக்கு ஒரு பிரியாவிடை போட்டியை நடத்தி வழி அனுப்பி வைத்திருக்கலாம் என்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பேசிவருகிறார்கள்.

Dhoni-1

எதிரி நாடு என்று கூறப்படும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான இன்சமாம் உல் ஹக், சோயப் அக்தர் போன்ற வீரர்கள் கூட தோனிக்கு ஒரு பிரியாவிடை போட்டியை நடத்த வேண்டும் என்று பேசிவருகிறார்கள். இந்தியாவின் சார்பில் யாரும் அப்படி பேசவில்லை. என்ன இருந்தாலும் அது தோனியின் தனிப்பட்ட முடிவாகும் என்று தெரிகிறது.

அதனை தாண்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இன்னும் இரண்டு வருடங்கள் தோனி ஆடுவார் என்று தெரிகிறது. இவருக்கு தற்போது 40 வயதாகிவிட்டது. இன்னும் இரண்டு வருடங்கள் ஆடுவதற்கான உடல்தகுதி அவரிடம் இருக்கிறது என்றே கூறலாம். சமீபகாலமாக தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொத்து என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள் கூறி வருவதை பார்த்து இருப்போம்.

CSK-Owner

தற்போது அதே தகவலை தெரிவித்து இருக்கிறார் அந்த அணியின் தலைமை செயல் நிர்வாகி காசிவிஸ்வநாதன். அவர் கூறுகையில்…

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு அறிவித்து விட்டார். அந்த முடிவில் நாங்கள் தலையிட முடியாது. ஐபிஎல் தொடரில் இருந்து சீக்கிரத்தில் ஓய்வு பெற மாட்டார் என்று நம்புகிறோம். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பயிற்சியை தொடங்கி விட்டது. என்று தெரிவித்துள்ளார்.

csk

அதனை தாண்டி தோனி எத்தனை வருடம் வேண்டுமானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடலாம். ஆனால், வேறு அணிக்காக அவரை நாங்கள் தாரை வார்க்க மாட்டோம். அவர் அணிக்காக ஒரு வீரராக ஆடாவிட்டாலும் எப்போதும் அணியின் ஒரு அங்கமாகவே இருப்பார் என்று தெரிவித்துள்ளார் காசி விசுவநாதன்.