அனைவருக்கும் முன்னதாக துபாய் பறக்கவுள்ள சி.எஸ்.கே அணி யாரெல்லாம் போறாங்க தெரியுமா ?

CSK
- Advertisement -

இந்தியாவில் துவங்கி நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது எஞ்சியுள்ள 31 ஆட்டங்கள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளதால் தற்போது ஐபிஎல் அணிகள் இந்த தொடருக்காக தயாராகி வருகின்றன.

IPL

- Advertisement -

எப்போதும் ஐபிஎல் என்றாலே சிஎஸ்கே அணி முதலாவதாக தங்களது பயிற்சியை தொடங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்த துவங்கும். அந்த வகையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எஞ்சிய தொடரிலும் சிஎஸ்கே அணியே முதல் முதலாவது அணியாக அங்கு சென்று பயிற்சியை துவங்க உள்ளது.

இது குறித்து வெளியான பிசிசிஐ கருத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் எப்போது வேண்டுமானாலும் ஐபிஎல் அணிகள் சென்று அங்கு பயிற்சியில் ஈடுபடலாம் என்று தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தற்போது சி.எஸ்.கே அணி நிர்வாகம் முதற்கட்டமாக அணியில் உள்ள சில வீரர்களை அழைத்துக் கொண்டு அமீரகம் புறப்பட முடிவு செய்துள்ளது.

csk vs rr

இது குறித்து பேசி உள்ள சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் கூறுகையில் : சிஎஸ்கே அணியானது ஆகஸ்ட் 14 அல்லது ஆகஸ்ட் 15ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் புறப்படும் என்றும் இதில் சில வீரர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள் என்றும் பல முன்னணி வீரர்கள் அதன்பிறகு அணியில் இணைவார் என்று தெரிவித்தார்.

அவர் கூறியதன் படி பார்க்கையில் இந்த குழுவில் நிச்சயம் கேப்டன் மகேந்திரசிங் தோனி, துணை கேப்டன் ரெய்னா மற்றும் ராயுடு போன்ற வீரர்கள் கலந்து கொள்ள பெரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement