இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் வேளையில் அடுத்த 2026 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போதைய கலைக்கட்ட துவங்கிவிட்டது. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணிகளில் ஒன்றாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆண்டு தங்களது அணி பலமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.
தல தோனிக்கு அடுத்த சீசன் தான் கடைசியா? :
அதோடு தற்போது அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது உறுதி என்பது குறித்தும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அப்படி வெளியான தகவல்தான் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார்.
ஆனால் தற்போது 44 வயதை எட்டியுள்ள தோனி இன்னும் எத்தனை சீசன்கள் விளையாடுவார்? என்பது உறுதியாக கூறப்படவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு பேசிய தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முன்னதாக 6 முதல் 8 மாதங்கள் இருப்பதனால் அதுவரை தான் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். அப்படி உடல் ஒத்துழைத்தால் மட்டுமே விளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடுவார் என்பதை ஏற்கனவே காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியிருந்த வேளையில் தற்போது இந்த 2026 ஐபிஎல் சீசன் தான் தோனிக்கு கடைசி சீசன் என்பதையும் சிஎஸ்கே அணியின் நிர்வாகம் உறுதி செய்யும் வகையில் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் வெளியான வீடியோவில் : தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புவது போன்ற ஒரு காட்சி இருக்கிறது. அதற்கு பதில் கொடுத்துள்ள சிஎஸ்கே அணியின் நிர்வாகம் : ஒன் லாஸ்ட் டைம் என்று கோடுகளின் மூலம் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளது.
இதையும் படிங்க : ரபாடா, சுதர்சன் இல்லை.. சுந்தரை வைத்து எதிர்பாராத மாஸ் மாற்றம்.. இந்திய அணி பற்றி கேப்டன் கில் பேட்டி
இதன் காரணமாக அடுத்த 2026 ஐ.பி.எல் தான் தோனிக்கு கடைசி சீசன் என்பதை மறைமுகமாக சிஎஸ்கே அணியின் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் தோனி 2026 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்று விடுவாரா? என்ற சந்தேகங்களையும் சமூக வலைத்தளம் மூலமாக எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.



