ஐ.பி.எல் 2018: சென்னை சூப்பர் கிங்ஸ் மொபைல் APPஅறிமுகம் – வீடியோ உள்ளே

jadeja
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில் அணிகளின் அறிமுகம், விளம்பரம், அணி வீரர்களின் பயிற்சி என பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்த ஐபிஎல்-இல் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி களமிறங்க இருப்பதால் தமிழக ரசிகர்கள் இன்னும் உற்சாகத்தில் உள்ளனர்.

jadeja1

- Advertisement -

இந்நிலையில் தமிழக ரசிகர்கள் அனைவரையும் இணையத்தில் ஒன்றிணைக்கும் விதமாக சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தரப்பிலிருந்து “மொபைல் அப்ளிகேஷன்” ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் சி.இ.ஓ திரு. கே.எஸ்.விஸ்வநாதன் தலைமையில் சென்னை வீரர் ரவீந்திர ஜடேஜா நேற்று இந்த “மொபைல் ஆப்-ஐ” ரசிகர்களுக்காக துவக்கி வைத்தார்.

டெக்-பிளே என்கிற மென்பொருள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த செயலி மூலம் சென்னை சூப்பர்கிங்ஸ் ரசிகர்கள் “செய்திகள்,கருத்துகள்,ரசிகர்கள் வட்டம்,கேள்வி பதில் போட்டிகள் மற்றும் சிஎஸ்கே டிவி” ஆகிய வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த செயலியின் மூலம் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை புக் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை அணியின் சிஇஓ விஸ்வநாதன் பேசுகையில் “இந்த செயலி சென்னை அணியையும் ரசிகர்களையும் இன்னும் நெருக்கமாக்கிட உதவும்” என்றார்.ஐபிஎல்-இன் முதல் ஆட்டத்திலேயே வலுவான இரண்டு அணிகளான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் வரும் ஏப்ரல் 7ம் தேதி மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement