- Advertisement -
ஐ.பி.எல்

அடுத்தடுத்த தோல்விகள்.. 17 வயது வீரரை டிரையல்ஸ்க்கு அழைத்த சி.எஸ்.கே – யார் இந்த வீரர்?

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி துவங்கிய இந்து தொடரானது தற்போது இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள வேளையில் இந்த தொடரில் விளையாடி வரும் சிஎஸ்கே அணியானது இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த வகையில் இந்த தொடரின் முதல் போட்டியில் சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை அணியானது அடுத்தடுத்து பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே தோல்வியை சந்தித்தது.

சி.எஸ்.கே அணியின் டிரையல்ஸ்க்கு அழைக்கப்பட்டுள் 17 வயது மும்பை வீரர் :

இதன்காரணமாக முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இரண்டு தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. இப்படி சிஎஸ்கே அணி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது பலரது மத்திலும் அதிருப்தியை ஏற்ப்படுத்தி உள்ளது.

- Advertisement -

அதோடு தற்போதைய சிஎஸ்கே அணி 180 ரன்களை கூட சேசிங் செய்ய முடியாமல் திணறி வருவதால் சீனியர் வீரர்களை நீக்கி விட்டு அதிரடியான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற பேச்சுக்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இந்த சூழலுக்கு இடையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மும்பை சேர்ந்த 17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரேவை சோதனைக்கு அழைத்திருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலினை உறுதி செய்திருந்த சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறுகையில் : நாங்கள் ஆயுஷ் மாத்ரேவை சோதனை முகாமிற்கு அழைத்துள்ளோம். ஏனெனில் ஏற்கனவே அவர் எங்களது திறனறியும் குழுவின் கவனத்தை ஈர்த்திருந்தார். அதுமட்டும் இன்றி உள்ளூர் தொடர்களிலும் அவர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தற்போது அவரை டிரையல்ஸ்க்கு அழைத்துள்ளோம்.

- Advertisement -

ஒருவேளை எங்கள் அணியில் யாரேனும் ஒருவருக்கு காயம் என்றதும் பட்சத்தில் அவர் அணிக்குள் வருவார் என்று கூறியுள்ளார். இப்படி காசி விஸ்வநாதன் கூறுவதை வைத்து பார்க்கையில் : இந்த தொடரின் பாதியில் நிச்சயம் ஆயுஷ் மாத்ரே சிஎஸ்கே அணியுடன் இணைவார் என்றும் அவரது வருகைக்காக யாராவது ஒரு அணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

இதையும் படிங்க : அப்படியே சுனில் கவாஸ்கரை பாத்த மாதிரியே இருந்தது.. சாய் சுதர்ஷனை ஆஹா ஓஹோவென – புகழ்ந்த நவ்ஜோத் சிங் சித்து

ஏற்கனவே சென்னை அணிக்காக தோனியின் சார்பாக சோதனைக்கு அழைக்கப்பட்ட அவர் சென்னை வந்து பயிற்சிகளை மேற்கொண்டிருந்த வேளையில் அவரை மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி தேர்வு செய்யவில்லை இருந்தாலும் தற்போது அவரது சிறப்பான பார்மை கருத்தில் கொண்டு மீண்டும் சிஎஸ்கே அணி அவரை டிரையல்ஸ்க்கு அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -