அவரை மாதிரி பேட்ஸ்மேனை சீக்கிரம் கண்டுபிடிங்க, இல்லனா அவ்ளோதான் – சிஎஸ்கேவை எச்சரிக்கும் ஜாம்பவான்

raina
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கினாலும் பங்கேற்ற 14 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக 10 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்தை பிடித்து லீக் சுற்றுடன் நடையை கட்டியது அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. அந்த அணி 14 கோடிக்கு வாங்கிய தீபக் சஹர் காயத்தால் விலகியது ஆரம்பத்திலேயே மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. ஏனெனில் அவரை தவிர வேறு தரமான இந்திய வேகப்பந்துவீச்சாளர் இல்லாத நிலையில் அதை சரி செய்ய வேண்டிய இதர வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களும் வள்ளலாக ரன்களை வாரி வழங்கினர்.

CSK MS Dhoni Ravindra Jadeja

அதைவிட தொடர் துவங்க ஒருசில நாட்கள் முன்பாக காலம் காலமாக கேப்டனாக செயல்பட்டு 4 கோப்பைகளை வென்று கொடுத்த எம்எஸ் தோனி அந்தப் பொறுப்பை தேவையின்றி அனுபவமில்லாத ரவிந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். அதில் முதல் 4 போட்டிகளில் வரிசையாக தோல்வியடைந்த சென்னையின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு முக்கால்வாசி பறிபோனது. மேலும் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் அழுத்தம் பேட்டிங் பவுலிங் என மொத்தமாக பாதித்ததால் அந்த பதவியே வேண்டாம் என்று மீண்டும் தோனியிடம் வழங்கிய ஜடேஜா அடுத்த போட்டியில் காயமடைந்து மொத்தமாக வெளியேற்றினார்.

- Advertisement -

ரெய்னா மிஸ்:
அதேபோல் இந்த வருடம் சென்னையின் சுமாரான பேட்டிங்கும் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. குறிப்பாக கடந்த வருடம் ஆரஞ்சு தொப்பியை வென்ற ருதுராஜ் இம்முறை சுமாராக செயல்பட்ட நிலையில் அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, மொயின் அலி போன்ற பேட்ஸ்மேன்களும் பெரிய ரன்களை எடுக்க தவறினர். சொல்லப்போனால் வரலாற்றில் இந்த வருடம் தான் முதல் முறையாக எந்த ஒரு சென்னை பேட்ஸ்மேனும் 400 ரன்களை எடுக்கவில்லை.

raina 1

இப்படி தேவையற்ற கேப்டன்ஷிப் மாற்றம், சுமாரான பேட்டிங் – பவுலிங் என எதுவுமே சரியாக அமையாத சென்னை 2020க்கு பின் வரலாற்றில் 2-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் அவமானத்துடன் வெளியேறியது. இதில் ஆச்சரியம் என்னவெனில் இந்த 2 சீசன்களிலும் அந்த அணியின் முன்னாள் நம்பிக்கை நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா இடம் பெறவில்லை. அதனால் ரெய்னா இல்லாததால்தான் சென்னை தோற்றது என்றும் அவர் இல்லை என்றால் சென்னையும் இதர அணிகளை போன்ற சாதாரண டீம் தான் என்றும் பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.

- Advertisement -

சீக்கிரம் கண்டுபிடிங்க:
அவர்கள் கூறுவதும் உண்மைதான் என்பதுபோல் ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 முதல் தனது அதிரடி சரவெடியான பேட்டிங்கால் எதிரணிகளை பந்தாடிய சுரேஷ் ரெய்னா வரலாற்றில் அதிக முறை ஒரு சீசனில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த பேட்ஸ்மேன், சென்னைக்காக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மென் போன்ற பல சாதனைகளை படைத்து “மிஸ்டர் ஐபிஎல்” என வல்லுநர்களால் போற்றப்பட்டார்.

Ravi Shastri Suresh Raina

அதன் காரணமாக “சின்னத்தல” என சென்னை ரசிகர்கள் அவரை கொண்டாடிய நிலையில் 2021இல் சுமாராக பேட்டிங் செய்தார் என்பதற்காக காயம் என்ற பெயரில் கழற்றி விட்ட அந்த அணி நிர்வாகம் இந்த வருடம் ஏலத்தில் வாங்கி பெஞ்சில் கூட அமர வைக்காமல் டாட்டா காட்டி நன்றி இல்லாமல் நடந்து கொண்டது.

- Advertisement -

அதற்கு பலனாய் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த சென்னை அணி கூடிய சீக்கிரம் ரெய்னாவை போன்ற ஒரு தரமான பேட்ஸ்மேனை கண்டறிய வேண்டும் இல்லையெனில் வரும் காலங்களில் அந்த அணியின் நிலைமை மோசமாகிவிடும் என்று ஜாம்பவான் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த பல வருடங்களாக சென்னை மிகச் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் அவர்கள் சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பை மறந்துவிட்டனர். அவர் ஐபிஎல் தொடரில் தன்னை நிரூபித்த ஒரு வீரர்.

அவர் தொடர்ச்சியாக 3-வது இடத்தில் நிறைய ரன்களைக் குவித்தவர். அவர் எப்போதுமே அடுத்து களமிறங்கும் பேட்ஸ்மேன்களுக்கான வேலையை முன்கூட்டியே அதிரடியான ரன்களைக் குவித்து எளிதாக்கினார். தற்போது ராயுடு மற்றும் உத்தப்பா விளையாடினாலும் அவரின் (ரெய்னாவின்) இடத்தை யாரேனும் நிரப்பினால் மட்டுமே நிறைய வித்தியாசம் ஏற்படும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : லக்னோவுக்கு அதிர்ஷ்டம் ரொம்பவே குறைவு, கண்டமே இந்த இடத்துல தான் காத்திருக்கு – எதனால் தெரியுமா?

அதே போல் அனுபவமில்லாத கேப்டன்சிப் பொறுப்பில் ஜடேஜா தடுமாறியது பற்றி ரவி சாஸ்திரி பேசியது பின்வருமாறு. “ரவீந்திர ஜடேஜா ஒரு டாப் கிரிகெட்டர். அவர் உலகில் ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர். அவரிடம் கேப்டன்ஷிப் அழுத்தத்தை கொடுத்திருக்கக் கூடாது. அவரை சுதந்திரமாக விளையாட விட்டிருக்க வேண்டும். கடந்த சில வருடங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் ஒரு மேட்ச் வின்னர் ஆவார்” என்று கூறினார்.

Advertisement