சன் ரைசர்ஸ் அணி பெற்ற வெற்றியால் சி.எஸ்.கே அணிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை – புள்ளி பட்டியலில் ஏற்பட்ட பின்னடைவு

CSK vs SRH
- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அனியானது நடப்பு 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக துவங்கியது. கடந்த மார்ச் 23-ஆம் தேதி தங்களது முதல் லீக் ஆட்டத்தில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலாக இந்த தொடரை துவங்கியது. இதன் காரணமாக சென்னை அணி அடுத்தடுத்த போட்டிகளிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சி.எஸ்.கே அணிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை :

ஆனால் அடுத்ததாக நடைபெற்ற நான்கு போட்டிகளில் பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி மற்றும் பஞ்சாப் என அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த சென்னை அணி முதல் 5 போட்டிகளிலேயே நான்கு தோல்விகளை பெற்று பெரும் பின்னடைவை சந்தித்தது. அவ்வேளையில் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்த எஞ்சியுள்ள 2025 ஐ.பி.எல் தொடரில் இருந்தே வெளியேறினார்.

- Advertisement -

அதன்காரணமாக மீண்டும் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். அவரது இந்த கேப்டன்சி கம்பேக் நிச்சயம் சென்னை அணிக்கும் ஒரு திருப்பத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தோனி தலைமையிலான சென்னை அணி கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடி மோசமான தோல்வியை சந்தித்தது.

இதன் காரணமாக முதல் 6 போட்டிகளின் முடிவில் 5 தோல்விகளை சென்னை அணி பதிவு செய்திருந்தது. இவ்வேளையில் நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்கினை துரத்திய சன் ரைசர்ஸ் அணி வெகு எளிதாக 18.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி இந்த போட்டியை கைப்பற்றியிருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது சன்ரைசர்ஸ் அணியானது முதல் 6 போட்டிகளின் முடிவில் 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறியது. அதேவேளையில் சன் ரைசர்ஸ் அணி பெற்ற இந்த பிரமாதமான வெற்றியின் மூலம் தற்போது சிஎஸ்கே அணி இந்த தொடரின் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு பரிதாப நிலையை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : இந்திய வீரராகவும், முதல் சன் ரைசர்ஸ் வீரராகவும் இரட்டை சாதனையை நிகழ்த்திய அபிஷேக் சர்மா – விவரம் இதோ

மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் 4 தோல்விகளுடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் வேளையில் சென்னை அணி 6 போட்டிகளில் 5 தோல்விகளுடன் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. இன்னும் இந்த தொடரில் சென்னை அணிக்கு 8 போட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பும் 90% பறிபோயுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement