கேப்டன் பதவியில் இருந்து திடீரென ஜடேஜா விலகியது ஏன்? இதுதான் காரணமா? – புதிய குழப்பம்

Jadeja-1
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 15-வது ஐபிஎல் தொடரானது ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக கேப்டன் தோனி தனது பதவியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். அவரின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியாக இருந்தாலும் எதிர்கால சிஎஸ்கே அணியை சரியாக கட்டமைக்க வேண்டும் என்பதன் காரணமாக சரியான நேரத்தில் தோனி அந்த முடிவை எடுத்ததாக ரசிகர்களும் கொண்டாட ஆரம்பித்தனர். ஆனால் ஜடேஜாவின் தலைமையில் சென்னை அணி இந்த சீசனில் மரண அடி வாங்கியது. 8 போட்டிகளில் பங்கேற்றுள்ள சென்னை அணியானது 6 தோல்விகளை பெற்று கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாத நிலைக்கு வந்துள்ளது.

Jadeja

- Advertisement -

இந்நிலையில் இன்று திடீரென சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் இருந்து பரபரப்பான ஒரு தகவல் வெளியாகியது. அதன்படி ஜடேஜா தனது சொந்த ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் மீண்டும் கேப்டன் பதவியை தோனியிடம் கொடுக்கிறார் என்று கூறப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் சென்னை அணியின் அதிகாரப்பூர்வ கேப்டனாக தோனி மாறியுள்ளார். ஆனால் இப்படி திடீரென ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்து விலகியது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இது ஜடேஜா தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவா? அல்லது நிர்வாகமே முற்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக என்று யோசிக்க வைக்கிறது.

ஏனெனில் வெறும் 8 போட்டிகளில் மட்டுமே கேப்டனாக செயல்பட்ட ஜடேஜா தானாக கேப்டன் பதவியில் இருந்து வெளியேற வாய்ப்பில்லை என்றும் தோனி அடுத்த சீசனிலும் விளையாட வேண்டும் என்பதற்காக நிர்வாகம் இந்த முடிவினை எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றிய போதே தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது கடைசி போட்டியில் சேப்பாக்கத்தில் விளையாடிவிட்டு தான் ஓய்வு பெற ஆசை என்று தோனி தெரிவித்ததால் இந்த ஆண்டு அவர் ரீடெயின் செய்யப்பட்டார்.

Jadeja-1

இந்நிலையில் இந்த ஆண்டு சேப்பாக்கத்தில் போட்டி நடைபெறாததால் தோனி திடீரென ஓய்வு பெறவும் வாய்ப்பு உள்ளது என்பதற்காக அதனை தள்ளிவைக்க வேண்டும் என்றே மீண்டும் சிஎஸ்கே நிர்வாகம் அவருக்கு கேப்டன் பதவியை வழங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு வகையில் பார்க்கையில் ஜடேஜாவின் தனிப்பட்ட ஆட்டமும் மிகவும் மோசமாகவே இருக்கிறது. ஏனெனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 112 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி இருப்பதனால் அவர் தனிப்பட்ட முறையில் தனது ஆட்டத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் என்று கூறப்படுகிறது. எது எப்படி இருப்பினும் மீண்டும் தோனி சென்னை அணியின் கேப்டனாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்த தொடரில் மீதமுள்ள போட்டிகளில் தோனி கேப்டனாக மாறியிருப்பதால் சென்னை அணி நிச்சயம் வெற்றி பெறும் அதிர்ஷ்ட காற்று வீசும் என்று ரசிகர்கள் தற்போதே ஆர்ப்பரிக்க துவங்கி விட்டனர்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடமே ஒப்படைத்த ஜடேஜா – காரணம் என்ன?

அதுமட்டுமின்றி இந்த சீசனை ஒரு டீசண்டான சீசனாக முடித்த பின்னர் நிச்சயம் அடுத்த ஆண்டு சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியுடன் தோனி வெற்றியுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பதே சி.எஸ்.கே ரசிகர்கள் அனைவரது விருப்பமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement