ருதுராஜ் பந்தை சேதப்படுத்தி சீட்டிங் செய்தாரா? ஆர்சிபி ஃபேன்ஸ் உருட்டலை உடைத்த சிஎஸ்கே ரசிகர்கள் பதிலடி

Ruturaj Khaleel
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 156 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய சென்னை 19.1 ஓவரில் இலக்கைத் தொட்டு இத்தொடரை வெற்றிகரமாக துவக்கியது.

பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் 53, ரச்சின் ரவீந்திரா 65* ரன்களும் பந்து வீச்சில் கலீல் அஹ்மத் 3, நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் பங்காற்றினர். முன்னதாக அந்தப் போட்டியில் சென்னை கேப்டன் ருதுராஜ் – கலீல் அஹ்மத் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை உருவாகியுள்ளது. அதாவது மும்பை அணி ஆட்டத்தை துவங்கிய போது கலீல் அகமது முதல் ஓவரை வீசுவதற்காக தயாரானார்.

- Advertisement -

உருட்டல் கருத்து:

அப்போது கலீல் அஹ்மத் பந்தை தேய்த்து விட்டு ஏதோ ஒரு பொருளை ருதுராஜ் கையில் கொடுக்கிறார். அதை ருதுராஜ் வாங்கி தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு செல்கிறார். அந்த வகையில் ஸ்விங்கை பெறுவதற்காக கலீல் அஹ்மத் பந்தை தேய்த்து சேதப்படுத்தியதாகவும் அதற்கு கேப்டன் ருதுராஜ் உடந்தையாக இருந்ததாகவும் பெங்களூரு மற்றும் மும்பை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் 10 நொடிகள் கொண்ட வீடியோவை ஆதாரமாக பகிர்ந்து வருகின்றனர்.

அதை பிசிசிஐ விசாரித்து 2016, 2017 போல அல்லாமல் சிஎஸ்கே அணிக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர். அதைப் பார்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள் எதையும் முழுமையாக பார்த்து விட்டு பேசுங்கள் என்று பதிலடி கொடுக்கிறார்கள். ஏனெனில் புதிய பந்து இயற்கையாகவே ஸ்விங் ஆகக்கூடிய ஒன்றாகும்.

- Advertisement -

சென்னை ரசிகர்கள் பதிலடி:

எனவே ஸ்விங் பெறுவதற்காக அதை தேய்க்க வேண்டிய அவசியமில்லை என்று சிஎஸ்கே ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் பழைய பந்தை தான் ஸ்விங் கிடைப்பதற்காக சேதப்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக 2018இல் ஸ்மித், டேவிட் வார்னர் செய்ததை சொல்லலாம். அத்துடன் உண்மையில் அந்த தருணத்தில் கலீல் அகமது தனது விரலில் ஃபிங்கர் ப்ரொடெக்டர் எனப்படும் விரலை காயத்திலிருந்து பாதுகாக்கும் உபகரணத்தை அணிந்திருந்தார்.

இதையும் படிங்க: ஒருமுறை இல்லை இரண்டு முறை மும்பை அணி தோற்றுவிட்டது.. இஷான் கிஷனின் பேன் ஆகிட்டேன் – ஹர்பஜன் சிங்

பவுலிங் செய்யும் போது அது பந்தில் சேதத்தை ஏற்படுத்தும். எனவே நடுவர் சொல்வதற்கு முன்பாகவே அதை அவர் கழற்றி ருதுராஜிடம் கொடுத்தார். அதன் பின்பு தான் ருத்ராஜ் அவரது கையில் பந்தை கொடுத்து விட்டு அதை வாங்கி தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். அதற்கு ஆதரமாக சிஎஸ்கே ரசிகர்கள் 27 நொடிகள் கொண்ட உண்மையான முழுமையான வீடியோவை பகிர்ந்து பெங்களூரு, மும்பை ரசிகர்களின் உருட்டலுக்கு பதிலடியைக் கொடுக்கின்றனர்.

Advertisement