கேதார் ஜாதவ்க்கு ஏன் சேன்ஸ் கொடுத்தீங்க ? இவரு என்ன தப்பு பண்ணாரு – தோனி மீது கடுப்பான ரசிகர்கள்

Jadhav-2

ஐபிஎல் தொடரில் 34 ஆவது லீக் போட்டி தற்போது ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Iyer

இந்நிலையில் டாஸ் போடப்பட்ட பிறகு இந்த போட்டியில் பியூஷ் சாவ்லாவிற்குப் பதிலாக கேதர் ஜாதவ்வை மீண்டும் அணிக்குள் கொண்டு வருவதாக தோனி அறிவித்து இருந்தார்.அவரின் இந்த கருத்திற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் இந்த சீசனில் 6 போட்டிகளில் ஆடியுள்ள கேதார் ஜாதவ் 58 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

மேலும் ஆல்ரவுன்டரான இவர் தற்போது பந்து வீசுவதும் கிடையாது. எனவே ரசிகர்கள் கேதார் ஜாதவ் வை ஏன் அணியில் சேர்த்தீர்கள் ? என்று சமூக வளைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளில் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட கேதர் ஜாதவ் இன்றைய போட்டியில் ஒரு பேட்ஸ்மேனாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Jadhav 1

ஆனால் அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ஜெகதீசன் ஒரு போட்டியில் விளையாடி 33 ரன்கள் அடித்து அசத்தியது மட்டுமின்றி பீல்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருந்தார். ஆனால் அவரை அணியில் ஒரு பேட்ஸ்மேனாக தோனி சேர்க்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். இன்றைய போட்டியில் ஜெகதீசனை சேர்க்காமல் எப்படி ஜாதவை மீண்டும் சேர்த்துள்ளீர்கள் ? என்று சென்னை ரசிகர்கள் தோனி மீது செம கடுப்பில் உள்ளனர்.

- Advertisement -

Jagadeesan

மேலும் தோனி எடுத்த இந்த முடிவின் மீது உள்ள அதிருப்தியை தங்களது பதிவுகளாக சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் துடிப்போடு செயல்படும் ஒரு இளம் வீரருக்கு பதிலாக இப்படி ஒரு வீரரை தேர்வு செய்யலாமா ? என்றும் தங்களது கோபத்தை நேரடியாக தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.