உங்கள எவ்ளோ நம்பினோம், நீங்களே இப்படி பண்ணலாமா? ஜடேஜா மீது அதிருப்தி அடைந்த ரசிகர்கள் – ஏன் தெரியுமா?

Jadeja-2
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய அணியாக ஆதிக்கம் செலுத்தி வரும் சிஎஸ்கே அணியானது இதுவரை நான்கு முறை கோப்பையை கைப்பற்றியது மட்டுமின்றி நடப்பு சாம்பியனாகவும் திகழ்ந்து வருகிறது. 2020ஆம் ஆண்டினை தவிர்த்து மற்ற அனைத்து சீசனிலும் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்ற ஒரே அணி என்ற சிறப்பான சாதனையையும் தங்கள் வசம் வைத்துள்ளது. இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் சிஎஸ்கே அணிக்கு நிறைய ரசிகர்கள் இருக்கும் வேளையில் இந்த ஆண்டு தோனி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியதால் ஜடேஜா தலைமையில் எவ்வாறு சிஎஸ்கே அணி செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது.

Jadeja

- Advertisement -

ஆனால் தற்போது அனைவரும் வருந்தும் படியாக சென்னை அணியின் செயல்பாடு இருந்து வருகிறது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்து உள்ளதால் கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது என்றே கூறலாம். சிஎஸ்கே அணியின் இந்த சரிவுக்கு பல முக்கிய காரணங்கள் இருந்தாலும் கேப்டன் ஜடேஜாவின் தனிப்பட்ட ஆட்டம் சரியில்லை என்று சென்னை அணியின் ரசிகர்கள் அவர் மீது பெரிய அதிர்ப்தியில் உள்ளனர்.

ஏனெனில் எப்போதுமே சிஎஸ்கே அணிக்காக ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் இறங்கும் ஜடேஜா கடைசி கட்ட ஓவர்களில் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் விரைவாக ரன்களை சேர்ப்பார். அதோடு கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு எந்த எண்ணிக்கையில் இலக்கு இருந்தாலும் அதனை வெற்றிகரமாக முடித்து கொடுப்பதிலும் தனது பங்களிப்பை அளிக்கக் கூடியவர். ஆனால் இந்த சீசனில் அவர் 14, 15-வது ஓவரிலேயே களமிறங்கி விளையாட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதால் பின்வரிசையில் வருபவர்களுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது.

jadeja

அதோடு இந்த சீசனில் அவரால் ரன்களை குவிக்க முடியாததாலும் பின்வரிசையில் வருபவர்கள் ரன் குவிக்க முடியாமல் அழுத்தத்தில் சிக்குகின்றனர். அதோடு பந்துவீச்சில் எப்போதுமே ஓவருக்கு 8 ரன்கள் என்ற விகிதத்தில் ரன்களை வழங்கினாலும் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்துவதில் ஜடேஜா வல்லவர். ஆனால் இந்த ஆண்டு முற்றிலுமாக அவரது பந்துவீச்சில் எந்த ஒரு சிறப்பும் இல்லை என்று கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் இந்த ஆண்டு அவர் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறி வருகிறார். அதோடு எதிரணி வீரர்களுக்கு அவர் பந்து வீச வரும்போது ஜாக்பாட் அடித்தது போல அவரது பந்துவீச்சை அடித்து நொறுக்குகின்றனர். மேலும் மூன்றாவதாக ஜடேஜாவின் பீல்டிங் முந்தைய சீசன்களில் எப்படி இருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. பந்து அவரை நோக்கி சென்றால் நிச்சயம் அவுட் என்றுதான் பலரும் நினைப்பார்கள்.

இதையும் படிங்க : அடுத்த சில போட்டிகளில் சென்னை அணியின் முன்னணி வீரரான இவர் ஆட வாய்ப்பில்லையாம் – அதிர்ச்சி தகவல் இதோ

ஆனால் இந்த ஆண்டு கைக்கு வரும் பல கேட்ச்களை அவர் தவற விட்டுவிட்டு உள்ளதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். இதன் காரணமாக பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்றிலும் சொதப்பும் ஜடேஜா கேப்டன் பதவியிலும் சொதப்புவதால் ரசிகர்கள் அவர்மீது பெரிய அதிர்ப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement